நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபல முன்னணி நடிகை ஆவார். இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும். மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்த நயன்தாரா பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா பின்னர் தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சிவகாசி வல்லவன் சிவாஜி பில்லா யாரடி நீ மோகினி என தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
தனது அபாரமான நடிப்பின் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த நயன்தாரா ஹீரோவே இல்லாத நாயகி சப்ஜெக்ட் கொண்ட படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்றார். இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று மக்கள் அழைக்கின்றனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நயன்தாரா தன்னை பற்றி பேசிய வலைப்பேச்சு சேனலை நேரடியாக தாக்கி பேசி இருக்கிறார்.

நயன்தாரா கூறியது என்னவென்றால் அவங்க மூணு பேரும் 50 எபிசோடு போட்டாங்கன்னா அதுல 45 எபிசோடு என்ன பத்தி மட்டும் தான் பேசுறாங்க. அது ஏன் அப்படினு விசாரிக்கும் போது என்ன பத்தி பேசினா தான் உங்களுக்கு வியூஸ் கிடைக்குதுன்னு சொல்லி இருக்காங்க. நமக்கு ஏற்கனவே மூணு மங்கீஸ் பத்தி நமக்கு தெரிஞ்சிருக்கும். கெட்டவைகளை பார்க்காதே பேசாதே கேட்காதே என்று அது ரெப்ரசண்ட் பண்ணும். ஆனா இவங்க மூணு பேரையுமே எனக்கு பார்க்கும்போது கெட்டவைகளை மட்டும் பேசுறது கேட்கிறது பார்க்கிறது அப்படிங்கறது எனக்கு தோணும் என்று நேரடியாக ஓபன் ஆக பேசியிருக்கிறார் நயன்தாரா.
