தன்னை பற்றி வதந்தி பரப்பினால் இதுதான் நடக்கும்… Silent-ஆ இருந்த சாய் பல்லவியை கிளப்பி விட்ட பிரபல நிறுவனம் ..!

By Soundarya on மார்கழி 12, 2024

Spread the love

மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை சாய் பல்லவி. அந்தத் திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். படத்தில் அவரை பார்த்த பலரும் இந்த நடிகைக்கு இதுதான் முதல் படமா என்று ஆச்சரியப்படும் வகையில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். இவர் ஒரு சிறந்த நடிகை என்பது மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸரும் கூட. விஜய் டிவியில் நடந்த நடனம் தொடர்பான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட அவர் போட்டியாளராக பங்கேற்றார்.

#image_title

பிறகு சினிமாவுக்குள் நுழைந்தார். போலிகளை உடைத்த நாயகி. இறுதியாக சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்த இந்து கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. தற்போது ராமாயணம் படத்தில் சாய் பல்லவி நடித்து வரும் நிலையில் இவர் அசைவம் சாப்பிடக்கூடாது என்று உறுதி எடுத்து இருப்பதாகவும், ஹோட்டலில் கூட சாப்பிட மாட்டார் எனவும்  பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

   
   

 

மேலும் வெளியூர்களுக்கு செல்லும்போது கூடவே சமையல்காரர்களை அழைத்து செல்வதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இதை டேக் செய்து சாய்பல்லவி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது, பெரும்பாலான சமயங்களில், கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும், அடிப்படையற்ற வதந்திகள் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடன்  பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் நான் அமைதியாக இருக்கிறேன். (கடவுளுக்குத் தெரியும்) ஆனால் அது தொடர்ந்து நடப்பதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது. நிறுத்தத் தெரியவில்லை.

குறிப்பாக எனது படங்களின் வெளியீடுகள், அறிவிப்புகள், எனது தொழில் வாழ்க்கையின் நேசத்துக்குரிய தருணங்களில் அடுத்த முறை நான் எந்த ஒரு “புகழ்பெற்ற” பக்கம் அல்லது ஊடகம், தனிநபர் செய்தி அல்லது கிசுகிசு என்ற பெயரில் சமைத்த கேவலமான கதையை எடுத்துச் செல்வதைக் கண்டால், நீங்கள் என்னிடமிருந்து சட்டப்படி கேட்கப்படுவீர்கள் நேரு கோபமாக பதிவிட்டுள்ளார்.