சூர்யா கூட அந்தப் படத்துல நான் தான் நடிச்சிருக்கணும்.. ஆனா,.. பல வருடம் கழித்து புலம்பும் காயத்ரி ரகுராம்..!

By Nanthini on மார்கழி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரைட் நடிகையாக இருந்தவர்தான் காயத்ரி ரகுராம். தமிழ் சினிமாவில் முக்கிய நடன இயக்குனராகவும் நடிகையாகவும் திகழ்ந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் ஆளை அடையாளம் தெரியாமல் இருந்த காயத்ரி வாய்ப்பு இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காததால் அப்படியே சினிமா பக்கம் திரும்பினார். தமிழக பாஜகவின் முகமாக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். அண்ணாமலை மாநில தலைவராக பதவியேற்ற பிறகு அவர் கட்சி ரீதியாக ஓரம் கட்டப்பட்டார்.

Acting on actress Gayatri Raghuram Filing a complaint to take | நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு

   

 

   

அதனை பலமுறை காயத்ரியே பகிரங்கமாக பல இடங்களில் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பாஜகவை விட்டு வெளியேறிய காயத்ரி தன்னுடைய எக்ஸ் தளத்தில் அண்ணாமலை செய்யும் உள்ளடி அரசியலை அம்பலப்படுத்தி வந்தார். சிறிது காலம் அரசியல் பாதையை விட்டு அமைதியாக இருந்து வந்த காயத்ரி பிறகு திமுகவில் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதிரடியாக அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவின் மாநில மகளிர் அணி துணை தலைவராக காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார்.

 

காயத்ரி ரகுராமை மட்டுமல்ல.. டீமையே பந்தாடிய அண்ணாமலை.. கூண்டோடு மாற்றம்.. லிஸ்ட் இதோ! | Annamalai changes entire team lead by Gayathri Raghuram in BJP - Tamil Oneindia

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சூர்யாவின் நந்தா படத்தில் நடிக்க முதலில் என்னதான் கூப்பிட்டாங்க. ஆனா அப்போ என்னால அந்த படம் பண்ண முடியல. காரணம் நான் அப்போது பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.

பாலாவின் நந்தா.. அப்போது நடந்த பிரச்னை இதுதான்.. சூர்யாவுக்காக சிவகுமார் வந்தார்.. பிரபலம் ஷேரிங்ஸ் | Producer Balaji Prabhu Talks about Bala And Suriya, Here are the ...

பிறகு 12ஆம் வகுப்பு படிக்கும் போது கூட தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரி நடித்துப் பார்க்கலாம் என்று சென்றேன். எனக்கு அப்போ முடி கம்மியாக இருந்ததால் விக் வச்சிட்டாங்க. அது ஒரு கிராமத்து கதை என்பதால் முடி நீளமாக இருக்க வேண்டும்.. விக் வைத்தது சுத்தமா எனக்கு பிடிக்கல. அதனால இனிமே நம்மளோட ஒரிஜினல் முடிய வச்சு தான் நடிக்கணும்னு முடிவு செய்து பிறகு முடி வளர்க்க ஆரம்பித்தேன் இன்று காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.