PAN இந்திய நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா.. தேவசேனா கோச்சிக்காம இருந்த சரி தான்..!

By Nanthini on மார்கழி 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை ஆக டைட்டிலை வென்றவர். அதனைத் தொடர்ந்து சினிமாவில் களமிறங்கிய அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியில் விஜய், அஜித் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகின்றார். தொடர்ந்து விஜயுடன் லியோ மற்றும் கோட் திரைப்படங்கள் திரிஷா நடிப்பில் வெளியாகிய அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் உடன் தக் லைப் மற்றும் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படங்களிலும் திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார்.

Trisha in more films | அதிக படங்களில் திரிஷா

   

இந்த இரண்டு திரைப்படங்களுமே அடுத்தடுத்த ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. நடிகை திரிஷா தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருகின்றார். ரஜினி, கமல், விஜய், அஜித் மற்றும் சூர்யா என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்த இவர் நடித்துள்ளார். அதனைப் போலவே மற்ற மொழிகளிலும் திரிஷா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள நிலையில் தான் இந்தியா நடிகையாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். சில காலங்கள் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த திரிஷாவுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன.

   

கொளுத்தி போடுடா வெடிய.. பிரபாஸ் படத்தில் இணையும் விஜய் பட நடிகை.. அதுவும் ஆன்ட்டி ஹீரோயினியா.. – Tamizhakam

 

குறிப்பாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கம் ஸ்பிரிட் என்ற திரைப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் நிலையில் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிரபாஸ் வில்லன் மற்றும் ஹீரோ என இரண்டு வேடத்தில் நடிக்க உள்ளார். வில்லன் ரோலில் நடிக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வில்லி கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.