jaya

MGR ஐ பேட்டி எடுத்த ஜெயலலிதா… அவர் கேள்விக்கு பதில் தராத புரட்சி தலைவர்…

By admin on மார்கழி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலும் சரி சினிமாவிலும் சரி தனக்கான தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருந்தவர் MGR.

   

MGR படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார். தன்னை ஆதாரத்தை தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் MGR.

   

MGR நல்ல மனம் கொண்டவர். உதவும் மனப்பான்மை கொண்டவர். தன்னை நாடி கையேந்தி வருபவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பவர். பல பேரை வாழ வைத்தவர் எம்ஜிஆர். அதைப்போல அவர் திராவிட கட்சிகளில் இணைந்து இருந்தாதால் கடவுள் நம்பிக்கைக்கு மாறாக இருப்பவர் என்ற பேச்சுகள் நிலவி வந்தது.

 

ஒருமுறை பத்திரிகைக்காக ஜெயலலிதா எம்ஜிஆரை பேட்டி எடுக்கும் போது உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு எம்ஜிஆர் நான் திருப்பதிக்கு சென்று இருக்கிறேன் சாமி கும்பிட்டு இருக்கிறேன் அங்குள்ள தாமரை விதை மாலையை கூட போட்டு இருக்கிறேன். ஆனால் கடவுள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் நம் கஷ்டங்களுக்கு கடவுள் காரணம் என்று கூறுவதை நான் விரும்ப மாட்டேன். எப்போதும் மனிதர்களை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை நான் விரும்புவேன். அன்பான மனங்களில் கடவுள் இருக்கிறான் என்பதைத்தான் நான் எப்போதும் நினைத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர். அதனால் கடவுள் நம்பிக்கை உண்டு இல்லை என்ற நேரடி பதிலை ஜெயலலிதாவுக்கு தரவில்லை எம்ஜிஆர்.