vetrimaaran

வெற்றிமாறன் கதையில் நடிக்க இருக்கும் சிம்பு… ஆனால் அதுல தான் ட்விஸ்ட் இருக்கு…

By admin on மார்கழி 9, 2024

Spread the love

வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் லயோலா கல்லூரியில் படித்த வெற்றிமாறனுக்கு சினிமாவின் மீது ஆர்வம் வந்தது. பாலு மகேந்திராவிடம் கதை நேரம் தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிய வெற்றிமாறன் பின்னர் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து சினிமா கலையை கற்றார்.

   

2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு தனுஷை வைத்து ஆடுகளம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதோடு பல தேசிய திரைப்பட விருதுகள் தென்னிந்திய சர்வதேச விருது என பல விருதுகளை வென்றது.

   

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தும் இருக்கிறார் வெற்றிமாறன். உதயம் nh4 நான் ராஜாவாக போகிறேன், காக்கா முட்டை போன்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். விசாரணை வடசென்னை விடுதலை பாகம் ஒன்று ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானார் வெற்றிமாறன். தற்போது இவர் இயக்கிய விடுதலை பாகம் 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

 

இந்நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்குவதற்காக வெற்றிமாறனிடம் ஒரு கதையைக் கேட்டிருக்கிறார். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டு ஒரு கதையை கொடுத்திருக்கிறார். இந்த கதையில் சிம்பு ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. வெற்றிமாறன் கதையில் சிம்பு நடிக்க போகிறாரா என்று ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.