sp

என் அப்பா National Football பிளேயர்… அதனால கால் உடைஞ்சிருச்சு… ஒரு பையன் மாதிரி குடும்பத்தை காப்பாத்தணும்… சாய் பல்லவி பகிர்ந்த ரகசியங்கள்…

By admin on மார்கழி 9, 2024

Spread the love

சாய்ல்லவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை ஆவார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்து வளர்ந்த சாய் பல்லவி மருத்துவ பட்டப்படிப்பை முடித்தவர். நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் சினிமாவில் பல பின்னணி கதாபாத்திரங்களும் நடித்து வந்தார் சாய் பல்லவி.

   

2015 ஆம் ஆண்டு பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான சாய் பல்லவி பேரும் புகழும் பெற்றார். தொடர்ந்து மாரி 2 படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இது மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் அமரன்.

   

அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் சிவகார்த்திகேயனும் சாய்பல்லவியும் புகழின் உச்சிக்கு சென்றனர். இதனால் அடுத்தடுத்து சாய் பல்லவி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தற்போது சாய்பல்லவி ஒரு நேர்காலில் கலந்து கொள்ளும்போது தனது அப்பாவை பற்றியும் தான் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவதைப் பற்றியும் பகிர்ந்து இருக்கிறார்.

 

சாய் பல்லவி கூறியது என்னவென்றால் என்னுடைய அப்பா நேஷனல் புட்பால் பிளேயர் அப்படி விளையாடும்போது அவருக்கு இரண்டு காலுமே உடைஞ்சிடுச்சு. அவருக்கு ரெண்டு காலிலுமே பிளேட் வைத்திருக்கிறது. அதுக்கு அப்புறம்தான் அவர் சென்ட்ரல் கவர்மென்ட் வேலைக்கு போய் எங்களையெல்லாம் வளர்த்தாரு. நான் எப்பவுமே கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படல. என்னோட குடும்பத்துக்கு நான் ஒரு பையனாக இருந்து என் குடும்பத்தை காப்பாத்தணும்னு தான் நான் என்னைக்குமே விரும்புறேன் என்று ரகசியங்களை பகிர்ந்து இருக்கிறார் சாய் பல்லவி.