coconut

முக்கிய நிகழ்வுகளில் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்…? சாஸ்திரம் கூறுவது என்ன…?

By admin on மார்கழி 8, 2024

Spread the love

இந்து மத வழிபாட்டில் தேங்காய் மிக முக்கிய இடம் பெறுகிறது. எந்த ஒரு வழிபாட்டை தொடங்குவதானாலும் தேங்காய் வைத்து உடைத்து தான் தொடங்குவார்கள். அதேபோல் முக்கிய நிகழ்வுகளில் முதலாவதாக தேங்காய் உடைப்பார்கள். சிலர் விநாயகப் பெருமானுக்கு 51 101 என்ற கணக்கில் சிதறு தேங்காய் உடைப்பார்கள். இது எதற்காக செய்கிறார்கள் இதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

   

முதலாவதாக கண்திருஷ்டி போக்குவதற்கு சிதறு தேங்காய் உடைப்பார்கள். குடும்பத்தில் கண் திருஷ்டி காரணமாக ஏதேனும் சங்கடங்கள் நடந்து கொண்டே இருந்தால் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் அல்லது குடும்பத்தில் உள்ள அனைவரின் தலையையும் தேங்காயால் சுற்றி உடைப்பார்கள். இதனால் கண்திருஷ்டி விலகும் என்பது ஐதீகம்.

   

அதேபோல எந்த ஒரு சுப காரியங்களுக்கு வெளியே கிளம்பும்போது கோவில்கள் சபரிமலை அல்லது வேறு எந்த கோயில்களுக்கு செல்லும்போது தடையில்லாமல் சென்று வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காயை உடைப்பார்கள். இது மட்டுமில்லாமல் வீடு கிரகப்பிரவேசம் புதிய தொழில் தொடங்குதல் போன்றவற்றிற்கு முன்பாகவும் சிலர் தேங்காய் உடைப்பார்கள்.

 

விநாயகப் பெருமானுக்கு வேண்டுதல் வைத்து சிலர் தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டி இருப்பவர்கள் அந்த வேண்டிய காரியம் நிறைவேறிய பிறகு சிதறு தேங்காய் உடைப்பார்கள். மற்றொரு காரணமாக கூறப்படுவது வாழ்வில் வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் இந்த சிதறு தேங்காயை போல் சிதறி தூள் தூளாகி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிதறு தேங்காய் உடைப்பதும் உண்டு.

ஏதேனும் தோஷம் இருந்தாலோ கிரக நிலைகள் சரியாக அமையாமல் இருந்தாலோ காரியத்தடை போன்றவைகள் நடந்திருந்தாலோ அதற்கு பரிகாரமாக சிதறு தேங்காய் உடைக்க சொல்வார்கள். மொத்தத்தில் நம்மை பிடித்து இருக்கும் கஷ்டம் பீடை அனைத்தும் நம்மை விட்டு தொலைய வேண்டும் என்பதே இந்த சிதறு தேங்காய் உடைப்பதின் நோக்கமாகும்.