தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.
இயக்குனர் விக்ரமனிடம் அஸோசியேட் இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். அதற்கு முன்பே அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதில் பணியாற்றிய கே எஸ் ரவிக்குமாருக்கு ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி.
அதில் தொடங்கிய கே எஸ் ரவிக்குமார் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியான படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் அஜித் இரண்டு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். வில்லன் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு படங்கள்தான் அவை.
கே எஸ் ரவிக்குமாரின் வெற்றி ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அது திட்டமிடல். ஒரு படத்தை இவ்வளவு நாட்களுக்குள் முடிக்கவேண்டும் என தயாரிப்பாளர் விரும்பினால் அதை எப்படியாவது முடித்துக் கொடுத்துவிடுவார். ஏனென்றால் கடன் வாங்கி முதலீடு செய்யும் தயாரிப்பாளரின் பணம் முக்கியமானது என நினைப்பவர்.

இப்படி இருந்ததால்தான் அவரை பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தங்கள் படத்துக்கு பணியாற்ற விரும்பி அழைத்தனர். ஆனால் அவரின் நேர்ம்றை பண்பே, அவருக்கு சில தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளது. அப்படி ஒரு படம்தான் லிங்கா திரைப்படம். அந்த படத்தை சொன்ன நாளுக்குள் எடுக்க வேண்டும் என அவசர அவசரமாக எடுத்து அந்த படம் மோசமான தோல்வியைப் பெற்றது.
