கில்லி படத்துல அந்த சீன்ல கொஞ்சம் அசந்து இருந்தா விஜய் அவ்வளவுதான்.. ஸ்டண்ட் மாஸ்டர் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்..!

By Nanthini on மார்கழி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனைகளையும் செய்துள்ளது. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் தான் இவருடைய சினிமா வாழ்க்கையில் கடைசி திரைப்படம் எனவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு இவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் தளபதி 69 படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீண்டும் திரையரங்குகளில் 'கில்லி' , திரைச்செய்தி செய்திகள் - தமிழ் முரசு  Cinema News in Tamil, Tamil Murasu

   

இப்படியான நிலையில் விஜய்யின் கில்லி திரைப்படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் கூறியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 20 வருடங்களுக்கு முன்பு விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கில்லி. இந்த படம் காலம் கடந்தும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு வருகிறது. இன்றும் டிவியில் ஒளிபரப்பப்பட்டால் இந்த படத்தை பார்க்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆல் சென்டரிலும் ஹிட் அடித்து இந்த படம் அனைத்து வயதினருக்கும் பிடித்த படமாக அமைந்தது. குறிப்பாக இந்த திரைப்படம் விஜய் ஒரு ஹீரோவாக சினிமாவில் எடுத்துக்காட்டியது. அதில் ஆக்சன் மட்டுமல்லாமல் காமெடி மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக இருந்தது.

   

கில்லி பட வில்லனின் மனைவியா இது? வைரல் புகைப்படம் - மனிதன்

 

அதனாலயே இந்த திரைப்படம் அனைவருக்கும் பிடித்த படம் ஆகியது. மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் வில்லத்தனம் அனைவரையும் கட்டி போட்டது. அதனைப் போலவே படத்தில் இடம்பெற்ற அர்ஜுனரே வில்லு, அப்படி போடு போடு ஆகிய பாடல்கள் அனைத்து வயதினரையும் ஆட்டம் போட வைத்தது என்று தான் கூற வேண்டும். இப்படி காலம் கடந்தும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் படத்தின் முதல் காட்சியில் பிரகாஷ்ராஜ் இடம் இருந்து த்ரிஷாவை காப்பாற்றி விஜய் காரில் அழைத்துக் கொண்டு செல்வார்.

Ghilli box office collection: Vijay, Trisha's romantic actioner breaks  Avatar, Sholay records, emerges as highest-grossing re-release of the  century | Tamil News - The Indian Express

அப்போது அதிரடியான ஆக்சன் காட்சிகள் அதில் நிறைந்திருக்கும். அந்த சமயத்தில் விஜய் த்ரிஷாவை அழைத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருக்கும்போது பின்னாடி நிறைய கார்களில் இவர்களை துரத்திக் கொண்டே வருவார்கள். அந்த சமயத்தில் விஜயின் காருக்கு பின்னால் வரக்கூடிய ஒரு கார் திடீரென பாம் வெடித்து சிதறும். அதற்கு சற்று இடைவெளி அமைத்து இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சற்று சொதப்பல் நடந்து விஜய் பயப்படும் அளவுக்கு ஒரு நொடிப்பொழுதில் அந்த பாம் வெடித்து சிதறியது. விஜயை அந்த காட்சியில் கண்ணை மூடி சற்று பயந்த மாதிரி தான் இருப்பார். அது உண்மையிலேயே நடந்த காட்சிதான். சற்று அசந்திருந்தால் அவ்வளவுதான் என்று தன் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் பேசியுள்ள இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.