தனியா 10 லட்சம் செலவு பண்ணி தன்னுடன் விஜயகாந்த் வைத்திருந்த பொருள்.. சீக்ரெட்டை பகிர்ந்த பாவா லக்ஷ்மணன்..!

By Nanthini on மார்கழி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

விஜயகாந்த் திருவுருவபடத்திற்கு தொழு நோயாளிகள் கண்ணீர் மல்க அஞ்சலி… – Madhimugam

   

அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

   

கல்யாணமா..? அந்த ஆசையே போச்சு; இதுதான் காரணமே - மனம் திறந்த பாவா லட்சுமணன்! - தமிழ்நாடு

 

இந்நிலையில் விஜயகாந்த் பற்றி பிரபல நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், வானத்தைப்போல படத்தில் ஒரு பாடல் காட்சி அதிகாலை 3 மணிக்கு எடுக்க வேண்டும் என்று டைரக்டர் சொல்லிட்டாரு. அத விஜயகாந்த் சார் கிட்ட சொன்னதும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நான் வந்து விடுவேன் என்று கூறிவிட்டு சக நடிகர்களிடமும் எல்லோரும் காலையில மூணு மணிக்கு வந்துருங்க என்று கூறினார். எப்பவுமே ஷூட்டிங்கில் கரெக்டா இருப்பாரு. அதுபோலவே சுமார் 10 லட்சம் மதிப்புள்ள ஒரு லென்ஸ் வச்சிருப்பாரு. சூட்டிங் வந்ததும் அதை கேமராமேன் கிட்ட கொடுத்துடுவாரு. அத பயன்படுத்தி எவ்வளவு ஃபில்டர் பண்ணனுமோ அதை பண்ணிப்பாங்க என்று விஜயகாந்த் பற்றி பாவா லட்சுமணன் பேசியுள்ளார்.