இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. அவையெல்லாம் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது உருவாக்கப்பட்டதாக கூட இருக்கலாம். சில நினைவுச் சின்னங்களாக இருக்கும் சில போர் நேரத்தில் படைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கோட்டைகள் போன்றவைகள் இருக்கும். ஆனால் இந்தியாவில் ஒரு ராஜா கட்டிய கோட்டை இன்று பேய் கோட்டை என்று கூறப்படுகிறது. அது என்ன அது எந்த இடத்தில் அமைந்து இருக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்ட மலைத்தொடரில் சரிஷ்கா ரிசெர்வ் எல்லையில் பகுதியில் அமைந்திருக்கிறது பாங்கர் கோட்டை. இந்த பாங்கர் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் மன்னர் பகவான் தாஸின் இரண்டாவது மகன் மதோசிங்கின் காலத்தின் போது கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை மலைகளின் அடிவாரத்தில் சாய்வான நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.
இந்த பாங்கர் கோட்டை டெல்லியில் இருந்து 235 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த கோட்டை மிகவும் பழமை வாய்ந்ததாகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. இந்த கோட்டை ஒரு பேய் கோட்டை பேய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோட்டை என்று அப்பகுதியில் வாழும் மக்கள் கூறுகிறார்கள். அதாவது இரவு நேரத்தில் இந்த கோட்டையில் இருந்து யாரோ நடனம் ஆடுவது போலவும் கொலுசு சத்தமும் அழுகுரலும் கேட்கிறது என்று கூறுகிறார்கள்.

கோட்டைக்கு இரவு நேரத்தில் சென்றவர்கள் உயிருடன் திரும்பி வந்ததில்லை காணாமல் போய்விடுகிறார்கள் அல்லது இறந்து விடுகிறார்கள் என்ற புராணக்கதை அங்கு நிலவுகிறது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் இந்த கோட்டைக்கு செல்லக்கூடாது என்ற அம்மாநில அரசே தடை விதித்து இருக்கிறது. ஆனாலும் பகல் நேரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கோட்டையை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். பயப்படவே மாட்டீர்கள் பயத்திற்கு நீங்கள் பயம் காட்டுவீர்கள் என்றால் இந்த பாங்கர் கோட்டையை சென்று கட்டாயம் நீங்கள் பார்க்கலாம்.
