92 வயதில் எள்ளு பேத்தி எடுத்து 5 தலைமுறையை கண்ட தமிழ் நடிகை.. இவங்கவ்யாருன்னு உங்களுக்கு தெரியுதா..?

By Nanthini on மார்கழி 7, 2024

Spread the love

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை வெளுத்து வாங்கும் நடிகைகளில் ஒருவர் தான் சௌகார் ஜானகி. பழம்பெரும் நடிகையான இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் இந்த காலகட்ட டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் 93 வயதை நெருங்கும் நிலையில் எள்ளு பேத்தி எடுத்து ஐந்து தலைமுறை கண்ட நாயகி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மிக சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

HBD Sowkar Janaki: 6 தலைமுறைப் பார்த்த நாயகி.. பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி  பிறந்தநாள் இன்று!

   

இவருடைய பேத்தி வைஷ்ணவியும் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்ணாமலை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் உடன் பிறந்த தங்கையாக இவர்தான் நடித்திருப்பார். 1931 ஆம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி கலைமாமணி மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல சிறப்பு மிக்க விருதுகளை பெற்றுள்ளார். சௌகார் என்ற படத்தில் நடித்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த காலகட்டத்திலேயே திரை உலகில் மனதை பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியமான ஒருவராகவும் இவர் வலம் வந்தார்.

   

15 வயதில் திருமணம்...16 வயதில் நடிகை...யதார்த்த பெண்மணி சௌகார் ஜானகிக்கு  பத்மஸ்ரீ விருது | Interesting Facts About Padma Shri Award Winner Veteran  Actress Sowcar Janaki - Tamil Filmibeat

 

மேலும் நடிக்க வரும்போது தனக்கு தேவையான காஸ்டியூம், உணவு, கார் மற்றும் பெட்ரோல் போன்ற அனைத்து இருக்கும் சொந்த செலவு செய்த நடிகையும் இவர்தான். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தமான இவர் தற்போது 93 வயதை நெருங்கும் நிலையில் இவருடைய ஐந்து தலைமுறை குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் தனது மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி மற்றும் எள்ளு பேத்தி என அனைவருடனும் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவர் பூரண ஆயுளுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று அவரை வாழ்த்தி வருகின்றனர்.

93 வயதை நெருங்கும் சௌகார் ஜானகி.. எள்ளு பேத்தி எடுத்து 5 தலைமுறைகளை கண்ட  குடும்ப புகைப்படம் - Cinemapettai