nsk

உடல்நலம் சரி இல்லாமல் இருந்த NSK… Silent ஆக MGR செய்த காரியம்…

By admin on மார்கழி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கான தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார் MGR.

   

MGR படங்களில் சமூக நீதி கருத்துக்கள் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் MGR. தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR அரசியலில் களமிறங்கினார்.

   

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினர் எம்ஜிஆர். MGR நல்ல மனிதர் மட்டுமல்ல உதவும் மனப்பான்மை கொண்டவர். இறக்க குணம் கொண்டவர். தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுப்பவர்.

 

அப்படி கலைவாணர் NSK சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மிகவும் வறுமையில் வாடினார். அப்போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதித்திருந்த அவர் மயக்கத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த எம்ஜிஆர் NSK விற்கு தெரியாமல் அவர் தலையணைக்கு அடியில் பணக்கட்டை வைத்து விட்டு சென்றிருக்கிறார்.

கண் விழித்து பார்த்த NSK தலையணைக்கு அடியில் பணம் இருப்பதை பார்த்த உடனேயே தனது மனைவியிடம் வந்தது யாரு எம்ஜிஆர் தானே அவர் தானே வந்துட்டு போயிருக்காரு என்று கூறியிருக்கிறார். அப்படி தன் செயல் மூலமாகவே தனது வருகையை மற்றவர்களுக்கு தெரியும்படி தனித்துவமாக நடப்பவர் எம்ஜிஆர்.