எல்லாத்துக்கும் விதண்டாவாதம் பண்ணுனா எப்படி? பத்திரிகையாளர் கேள்வியால் செம கடுப்பான சித்தார்த்..!

By Soundarya on மார்கழி 6, 2024

Spread the love

செவன் மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பாக சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் missyou . இயக்குனர் ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா உள்ளிட்ட பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

   

  ஜிப்ரான் இசையமைக்கும்  இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.  இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகள் நடந்து வருகிறது. அப்படி செய்தியாளர்களை சித்தார்த் மற்றும் படத்தின் நடிகை இருவரும் சந்தித்தனர். அப்போது, படம் பார்க்க வரும் போது popcorn, பார்க்கிங்க் செலவு என ஒரு 2000 ரூபாய் வந்துடுது என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சார் 22 வருஷமா நான் நடிச்சிட்டு இருக்கேன்.

   

 

22 வருஷமா மாறாத ஒரு சூழல் பத்தி கேட்டா என்ன கருது சொல்வேன். உங்களுக்கு வேணுனா என்னோட செலவுல பாப்கார்ன் வாங்கி தாரேன். உங்க செலவு கம்மியாகிடும்ல. எல்லோருக்கும் வாங்கி கொடுக்குற அளவுக்கு எனக்கு வசதி இல்ல. பரம்பரை பரம்பரையா தியேட்டர் வாராங்க. பாப்கார்ன் செலவுக்காக அவங்க நிறுத்தல. நீங்க வேணுனா நிறுத்திருப்பீங்க என்று கோபமாக பேசியுள்ளார். மேலும் படத்தின் டைட்டில் குறித்து பேசிய போது, Miss YOU என்று இங்கிலீஷ் டைட்டில் வச்சிருக்கீங்களே எப்படி இது ரெட் ஜெயண்ட் எடுத்துகிட்டாங்க.

அவங்க டைட்டில் ரொம்ப நல்ல இருக்குனு சொன்னாங்க. இங்கிலீஷ் டைட்டில் னு சொல்றது இப்போ தான் கேள்வி படுறேன். இப்படி எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசுனா நான் என்ன பண்ணுறதுன்னு கோபப்பட்டுள்ளார். நான் தமிழ் சினிமாவுல எப்படி இல்லனு சொல்றீங்க. நான் ஜெயிச்சிட்டு இருக்கேன். என் வீடு சென்னையில தான் இருக்கு. இங்கே தான் படம் தயாரிக்கேன். நான் indian 2 படத்துல நடிச்சது உங்களுக்கு படமா தெரியலையா? என்று கடுப்பாகியுள்ளார்.