அந்த வார்த்தைய ஏன் எழுதுனீங்க… கவிஞர் யுகபாரதியைத் திட்டி கோபித்துக்கொண்ட அவரின் மனைவி!

By vinoth on மார்கழி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி பாடல் ஆசிரியர்களில் ஒருவராக இருப்பவர் யுகபாரதி. 2000 களில் அறிமுகமாகி இப்ப்போது வரை பிஸியாக பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பவர்களில் அவரும் ஒருவர்.

பல காதல் பாடல்களையும் தத்துவப் பாடல்களையும் சோகப் பாடல்களையும் எழுதியுள்ள அவர் தன் மேடைப் பேச்சிலும் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கக் கூடியவர். அப்படி அவர் ஹிட் பாடல்கள் எழுதிய படங்களில் ராஜு முருகன் எழுதி இயக்கிய குக்கூ படமும் ஒன்று.

   

அந்த படத்தில் இடம்பெற்ற எல்லாப் பாடல்களையும் யுகபாரதிதான் எழுதியிருந்தார். அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின. ஆனால் அதில் ஒரு பாடலைக் கேட்டு அவரின் மனைவி யுகபாரதியைக் கோபித்துக் கொண்டாராம்.

   

 

குக்கூ படத்தில வர்ற ஒத்தநொடியிலதான் எனக்கு சித்தம் கலங்கிறுச்சேனு தொடங்கும் பாடலில் ஒரு இடத்தில் “பொட்டபுள்ள தொட்டதுமுமே கொட்டம் அடங்கிடுச்சு” என்று ஒரு வரி வரும். அந்த வரிகளைக் கேட்டுதான் ஏன் இப்டி எழுதினீங்கனு யுகபாரதிய பார்த்து கோவமா கேட்டுள்ளார்.

ஆனால் அவரின் கோபத்துக்கான காரணம் புரியாத யுகபாரதி  ‘அதுல என்ன இருக்கு நம்ம ஊர்ல பெண் பிள்ளைங்கள செல்லமா பொட்டபுள்ள னு கூப்ட்றது சகஜம் தானேனு’ கேட்டிருக்காரு. அதற்கு அவரின் மனைவி ‘இந்த படத்துல கதைப்படி ஹீரோயின் கண்ணு தெரியாத பொண்ணு , கண்ணு தெரியாதவங்கள அந்த  வார்த்த சொல்லி கிண்டல் பண்ணுவாங்கனு உங்களுக்கு தெரியாதா ?’ என்று கேட்டுள்ளார்.

அதை அவர் சொன்னபோதுதான் யுகபாரதிக்கு தான் எழுதிய வரிகளுக்கு இப்படி கூட ஒரு அர்த்தம் இருக்கிறதே என்று தோன்றியிருக்கிறது. இதை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டு யுகபாரதி வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார்.