கதையே இல்லாம ரிலீஸ் தேதி அறிவிச்சு உருவானதுதான் அந்த சூப்பர் ஹிட் படமா?… கே எஸ் ரவிக்குமார் பலே கில்லாடிதான்பா!

By vinoth on மார்கழி 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.

இயக்குனர் விக்ரமனிடம் அஸோசியேட் இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். அதற்கு முன்பே அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதில் பணியாற்றிய கே எஸ்  ரவிக்குமாருக்கு ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி.

   

   

அதில் தொடங்கிய கே எஸ் ரவிக்குமார் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியான படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் அஜித் இரண்டு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். வில்லன் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு படங்கள்தான் அவை.

 

ஒரு நேர்காணலில் வில்லன் படம் பற்றி பேசும்போது “என்னை ஒரு நாள் திடீரென்று தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தி வந்து சந்தித்தார். அவர் உங்கள் டைரக்‌ஷனில் அஜித் ஒரு படம் பண்ண வேண்டும் என ஆசைப்படுகிறார் என்றார். நானும் சம்மதம் சொன்னேன். ஆனால் அவர் என்னிடம் தீபாவளிக்குப் படம் ரிலீஸ் என்றார். தீபாவளிக்கு அப்போது இன்னும் நான்கு மாதங்கள்தான் இருந்தது.

கதை இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை என்றார்கள். வில்லன் என்று டைட்டில் மட்டும் முடிவு பண்ணியிருந்தார்கள். அப்புறம் கதையைப் பிடித்து அவர்கள் சொன்ன தேதியிலேயே படத்தை ரிலீஸ் செய்தோம்” எனக் கூறியுள்ளார்.