பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் மரணம்… அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்..!

By Soundarya on மார்கழி 4, 2024

Spread the love

மருதாணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நேத்திரன். இவர் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர். இவர் சீரியல் நடிகை தீபாவை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களும் சீரியல்களில் தான் நடித்து வருகிறார்கள். நேத்ரன் ஒரு சில படங்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கேன்சர் இருப்பதாக சமீபத்தில்அவருடைய மகள்  அபிநயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

   

இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகினர். அப்பாவுக்கு கேன்சர் நோய் என்று தெரிந்தது மருத்துவமனையில் சேர்த்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மகள்கள் அபிநயா மற்றும் அஞ்சனா இருவரும் தவிர்த்து வந்துள்ளனர். ஆனால் அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணாக போய்விட்டது.

   

புற்றுநோய் பாதிப்பு' - சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைவு' | Tamil serial  famous actor nethran passed away due to cancer - Vikatan

 

நேற்று நேத்ரன் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்துள்ளார். தந்தையின் மரணம் மீளா துயரில் இரு மகள்களையும் ஆழ்த்தியுள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் நேத்ரன் மறைவுக்கு சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சின்னத்திரை ரசிகர்களும் நேத்ரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.