எம்.எஸ் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூது கவ்வும்-2. இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படம் டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் சிங்கிள் ஆனது வரும் 13ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ட்ரைலர் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகுது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மிர்ச்சி சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்த மிர்ச்சி சிவா, நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொள்ள முக்கிய காரணமே நான் தான் என்று கூறினார். அதாவது விக்னேஷ் சிவன் நயன்தாரா இடையிலான காதல் உருவானதற்கும் இப்போது இருவரும் சந்தோஷமாக இருப்பதற்கும் நான் தான் காரணம் என்று கூறியுள்ளார். சூது கவ்வும் பார்ட் 2 எடுக்க வேண்டும் என்று யோசித்தோம்.

அந்த படம் அருமையான படம். அதனால் இந்த சூது கவ்வும் படத்துக்கு முன்பாக என்ன நடந்தது என்று விளக்கும் விதமாக இந்த படம் இருக்கும். அதனால்தான் இப்படத்தில் நடித்தேன். நானும் ரவுடிதான் படத்தில் நான் நடிக்க வேண்டியது. விக்னேஷ் சிவன் என்னிடம் வந்து கதை சொன்னார். அந்த கதை எனக்கு செட்டாகாது என்று சொல்லிவிட்டேன்.

அந்த படத்தில் நான் நடித்திருந்தால் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருக்க மாட்டார். அவருக்கு பதிலாக வேறொரு ஹீரோயின் தான் நடித்திருப்பார். அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தாலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையில் காதல் மலர்ந்திருக்காது. நான் நடிக்காததால் தான் நயன் விக்கி இடையே காதல் மலர்ந்தது திருமணமும் நடந்தது என்று கூறியுள்ளார்.
