சமீபத்திய காலங்களில் ஆன்லைன் மோசடி சைபர் குற்றங்கள் பல நடந்து கொண்டு இருக்கின்றன. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாற்றுபவர்கள் செய்யும் தந்திரத்தால் ஒரு சிலர் அவர்களது வலையில் விழுந்து விடுகிறார்கள். ஒரு சிலர் எச்சரிக்கையாக தப்பித்து விடுவார்கள். ஒரு சிலர் அதற்கும் மேற்படி போய் போலீசில் புகார் செய்து ஏமாற்றுபவர்களை கையும் களவுமாக பிடித்து விடுவார்கள்.

இந்த மோசடிகளை அதிகமாக்க பல ஆப்புகளும் இருக்கின்றது. தற்போது whatsapp instagram போலவே telegram என்ற ஒரு ஆப் பயன்பாட்டில் உள்ளது. இந்த டெலிகிராமில் தான் பலர் தற்போது பேசி வருகின்றனர். இந்த டெலிகிராம் மூலமாக நாங்கள் உங்களுக்கு பகுதி நேர வேலையை தருகிறோம் நாங்கள் செய்யும் டாஸ்க்களை நீங்கள் செய்தால் உங்களுக்கு பணம் வந்துவிடும் என்று கூறியிருக்கின்றனர். தற்போது ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்திருப்பவர் கூறியது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் “Room Racoon Backend Website” என்ற வெப்சைட்டில் இருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு பகுதி நேர வேலை தருவதாக கூறி ஒருவர் வந்தார்.
எங்களது நிறுவனம் வாடிக்கையாளர்கள் ஹோட்டல்களுக்கு மதிப்பீடு தருவது பொறுத்து நாங்கள் ஹோட்டல்களை வரிசைப்படுத்துவோம் எனவும் நீங்கள் வீட்டில் இருந்தே ஹோட்டல்களுக்கு மதிப்பீடு தருவதன் மூலம் உங்களுக்கு கமிஷன் அளிக்கப்படும் என்று கூறுகிறார்கள். அதன்படி முதல் முறையாக ஒரு சிறு தொகையை முதலீடு வாங்கி இருக்கிறார்கள். அதற்கு கமிஷனாக 959 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். நீங்க அதிகமாக செய்தால் உங்களுக்கு அதிகமாக பணம் வரும் என்று ஆசை வார்த்தைகளை கூறியதால் அடுத்து முதலீட்டாக 8000 ரூபாய் செய்திருக்கிறார் ஏமாற்றப்பட்டவர். அதற்கு கமிஷனாக 15 917 ரூபாயை திருப்பி அனுப்பி இருக்கின்றனர்.
அப்படி நாங்கள் உங்களுக்கு அதிகமாக ஹோட்டல்களை ரிவ்யூ செய்யும் பணியை தருகிறோம் நீங்கள் டாஸ்க் செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறி கூறி மொத்தமாக கிட்டத்தட்ட ரூபாய் 7, 31,116 வரை மோசடி செய்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஏமாந்தவர் போய் கேள்வி கேட்கும்போது நாங்கள் உங்கள் மொத்த பணத்தை திருப்பி தருகிறோம் என்று கூறி மேற்கொண்டு ஐந்து லட்சத்தை கேட்டிருக்கிறார்கள். ஏமாந்த அந்த நபர் உஷாராகி போலீசில் சென்று புகார் அளித்திருக்கிறார்.

இந்த வழக்கில் நிதி பரிவர்த்தனைகளை ஆராய்ந்த போலீசார் தர்மபுரியில் இருக்கும் செல்வகுமார்யை கைது செய்து இருக்கிறார்கள். அவர்தான் தங்களது நண்பர் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை வாங்கி மோசடி செய்திருக்கிறார். இதனை அறிந்த போலீசார் மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையை கூறி இருக்கிறார்கள். உங்கள் தொலைபேசியில் யாராவது முதலீடு கேட்டு வேலை தருகிறேன் என்று சொன்னால் யாருக்கும் உங்களது பணத்தை கொடுக்காதீர்கள். ஆசை வார்த்தைக்கு மயங்காதீர்கள் என்று விழிப்புணர்வு செய்தியை கூறியிருக்கிறார்கள்.
