“என்னோட படம் ரிலீஸ் அன்னைக்கு நான் சந்திரமுகி படம் பார்க்க போயிட்டேன்”.. காரணத்தை வெளிப்படையாக கூறிய இயக்குனர் விஷ்ணுவர்தன்..!

By Nanthini on மார்கழி 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் நடிகர் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டில் குறும்பு என்ற தெலுங்கு திரைப்படம் மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து பல திரைப்படங்களை இயக்கிய இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அஜித்தின் பில்லா படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அதுவரை தெருவில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த தனக்கு ஸ்டேடியத்தில் ஆடும் வாய்ப்பு போன்றது பில்லா படம் என்று அவர் பலமுறை கூறியுள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் | விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் - hindutamil.in

   

தற்போதும் தொடர்ந்து சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில், இன்னைக்கு வரைக்கும் என்னோட படத்தை 1st day நான் தியேட்டர்ல போய் பார்க்க மாட்டேன். பில்லா படத்தை கூட நான் தியேட்டர்ல போய் பாக்கல. தியேட்டருக்கு போனா அல்லு விடும். போன் ஆப் பண்ணிட்டு தூங்கிடலாம் போல இருக்கும். என்னோட முதல் படம் ரிலீஸ் ஆகும்போது எல்லோரும் அவ்வளவு ஆர்வமா இருந்தாங்க.

   

ஆகாஷ் முரளி அதிதி ஷங்கர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது எப்படி? - விஷ்ணுவர்தன்  விடை

 

அப்போ ஃபர்ஸ்ட் டிக்கெட் வாங்கலாம் என்று நினைத்து குடும்பத்தில் இருக்கிறவங்களை கூட்டிட்டு போய் நின்னு ஃபர்ஸ்ட் டிக்கெட் வாங்கினேன். கூட்டமே இல்ல. இருந்தாலும் படத்தோட ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சுக்காம வாங்குன டிக்கெட் எல்லாத்தையும் என் வீட்ல இருக்கவங்க கிட்ட கொடுத்துட்டு நீங்க போய் படம் பாருங்கன்னு சொன்னேன். நான் சந்திரமுகி படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கிட்டு காதை பொத்திகிட்டு போய் உட்கார்ந்து படம் பார்த்துட்டு இருந்தேன். இப்படி என்னோட ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கதை இருக்கு என்று விஷ்ணுவர்தன் பேசியுள்ளார்.