சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் விக்ராந்த் மாஸ்ஸி(37). மகாராஷ்டிராவில் பிறந்த இவர் மும்பையிலையே பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்த வீட்டு தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 2013 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் Broken But Beautiful என்ற வெப் தொடரில் நடித்த போது தன்னுடன் நடித்த ஷீதல் தாக்கூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடங்களாக இவர் சினிமாவில் இருந்தாலும் பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது 12th fail திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் மேதா சங்கர் நடித்த இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து sector 36, the Sabarmati report ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இந்தத் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விக்ராந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடவுள் சில ஆண்டுகளாக நீங்கள் எனக்கு ஆதரவு தந்துள்ளீர்கள். அதற்கு ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஆனால் வாழ்க்கையில் நான் முன்னேறி சென்று கொண்டு இருந்தாலும் இப்போது நான் வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது. ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக மற்றும் ஒரு நடிகனாகவும் இந்த கடமையை செய்தே ஆக வேண்டும். 2025 ஆம் ஆண்டு கையில் இருக்கும் படத்தின் மூலம் நாம் கடைசியாக சந்திப்போம். என்றென்றும் நான் உங்கள் அன்புக்கு கடமை பட்டுள்ளேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
