ஆர் ஜே வாக இருந்த பாலாஜி சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். நானும் ரௌடி தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இதனை தொடர்ந்து எல்கேஜி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நிலையில் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இதனை தொடர்ந்து கேரக்டர் நூல்களை விட ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அதன்படி அவருடைய இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீட்டுல விசேஷம் என்ற திரைப்படத்தையும் அவரே இயக்கியிருந்தார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனி ஒரு அங்கீகாரத்தை பெற்றார். இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது என கூறலாம். இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் 45 வது திரைப்படத்தை இவர் இயக்க உள்ளார். மேலும் இவர் நடிப்பில் சொர்க்கவாசல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய மனைவி குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது நாங்க லவ் பண்ணும்போது எங்க காதலை பொண்ணு வீட்டு சைடு ஏத்துக்கல. அவளை வேறு எங்கேயோ அவங்க அம்மா, அப்பா கூட்டிட்டு போயிட்டாங்க. அவ இல்லாத இடத்துல நாம எதுக்கு இருக்கணும்னு நான் கோவைக்கு PG படிக்க போயிட்டேன். அப்போ ஒருநாள் போன் கால்ல ஒரு பொண்ணு நான் வந்துட்டேனு சொல்லுச்சு.

நீ யாருன்னு கேட்கும்போது நான் தான் உன் லவ்வர் என்று சொன்னதும் சந்தோஷத்தில் பேசினேன். அப்போ எங்க வீட்டை விட்டு வந்துட்டேன் நீ உடனே சென்னைக்கு வான்னு கூப்பிட்டுச்சி. உடனே வந்து நெறைய இடதுல மறைந்து இருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்கப்புறம் அவங்க வீட்ல வந்து பேசி RECEPTION பண்ணி வச்சாங்க. என் மனைவி கார் நல்லா ஓட்டுவாங்க. அவங்க லாரி டிரைவரா பிறக்க வேண்டியவங்க என்று சொல்லி சிரித்துள்ளார்.
