கர்நாடக மாநிலம் ஹாசான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகை ஷோபிதா. 30 வயதான இவர் கன்னடத்தில் எரடொந்த்லா மூரு, ஏடிஎம், ஜாக்பாட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி மதுவே, கோகிலே போன்ற பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த பிரம்மகண்டு தொடர் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் பிரபலமானார். பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சிவன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் ஷோபிதா குடியேறினார்.

இந்த நிலையில் சோபிதா நேற்று அவருடைய இல்லத்தில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஷோபிதா இறந்த சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
