அன்னைக்கு நடந்த சம்பவம், அப்பவே குடியை விட்டுட்டேன்.. கவிஞர் வாலி பகிர்ந்த சுவாரஸ்யம்..!

By Nanthini on கார்த்திகை 29, 2024

Spread the love

தமிழ் திரை உலகில் நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு எழுதியவர் தான் கவிஞர் வாலி. இவர் பாட்டு எழுதியதோடு சிறுகதை, கவிதை மற்றும் நடிப்பு என பல்துறை வித்தகராகத்தான் திகழ்ந்தார். அவர் திரைத்துறையில் சுமார் 15,000 பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். வடை மாலை என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கியிருந்தார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை ஐந்து முறை பெற்ற பெருமைக்குரியவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

வாலி – OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

   

வெளிநாட்டிற்கு செல்ல எத்தனையோ அழைப்பு வந்தும் வாலி செல்லவில்லை. இப்படி பல புகழுக்குரிய வாலி 2013 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய பாடல்கள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகின்றன. இந்த நிலையில் கவிஞர் வாலி அளித்த ஒரு பேட்டியில் தான் குடியை நிறுத்திய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், 1977 ஆம் ஆண்டில் மூன்று படங்களுக்கு நான் கதை எழுதிய முத்துராமன் எடுத்துள்ளார். அதுபோல ஒரு படத்தின் சூட்டிங் சேலத்தில் நடைபெற்றது.

   

Lyricist Vaali write this Blockbuster Hit song after Drinking Alcohol : கவிஞர்  வாலி ஃபுல் போதையில் எழுதி... பட்டிதொட்டியெங்கும் பிளாக்பஸ்டர் ஹிட்டான பாடல்  பற்றி தெரியுமா?

 

சூட்டிங் எல்லாம் முடிச்சுட்டு ஒரு பூஜைக்கு மட்டும் நான் போயிருந்தேன். அன்னைக்கு எல்லாத்தையும் முடிச்சுட்டு நைட்டு கிளம்ப ரெடியா இருந்தேன். அப்போ நான் சிலர் கூட சேர்ந்து குடிச்சிட்டு இருந்தேன். அங்கு வந்த முத்துராமன், நீங்களும் கண்ணதாசனும் இதே வேலையாவே இருக்கீங்களே இதை விட்ருங்க என்று கேட்டார். சரி நான் சொல்றத மட்டும் நீ பண்ணு நான் இந்த குடியை விட்றேன் என்று முத்துராமன் கிட்ட நான் சொன்னேன். உடனே அவர் சரின்னு சொன்னதும் அவர் தலையில் அடிச்சு சத்தியம் பண்ணிட்டு அன்னையிலிருந்து நான் குடிக்கவே இல்ல என்று வாலி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.