test

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு… 10,000 உதவி தொகை தரும் இத்தேர்வின் முழு விவரங்கள் இதோ…

By admin on கார்த்திகை 28, 2024

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இந்த திறனாய்வு தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த வருடம் இந்த திறனாய்வு தேர்வு எப்போது நடைபெறுகிறது எப்போது விண்ணப்பிக்கலாம் என்பதைப் பற்றிய முழு விவரத்தை இனிக் காண்போம்.

   

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வருகிற ஜனவரி 25, 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2024 -2025ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

   

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு ரூபாய் பத்தாயிரம் என்ற கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தமிழக அரசு பாடத்திட்டத்தின் படி 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பாடங்களின் அடிப்படையில் தேர்வு இருத்தாள்களாக நடத்தப்படும்.

 

முதல் தேர்வு தாளில் கணிதம் தொடர்பான 60 வினாக்கள் இருக்கும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்பான 60 வினாக்கள் இருக்கும். முதல் தாள் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை இரண்டாம் தாள் மதியம் 2 மணி முதல் 4:00 மணி வரையிலும் நடைபெறும்.

இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn. gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை 30. 11. 2024 முதல் 9 12.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூபாய் 50 தேர்வு கட்டணமாக சேர்த்து மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 9.12.2024 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று இந்த தேர்வு தொடர்பா அறிக்கையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.