சர்ச் பாட்டு மாதிரிதான் இருக்கும்.. ஹாரிஸோட வெற்றி ஃபார்முலா இதுதான்… பிரபல இசையமைப்பாளர் சொன்ன கருத்து!

By vinoth on கார்த்திகை 28, 2024

Spread the love

சிலரை அறிமுகப்படுத்தும் போது அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பம் வரும். அந்த அளவுக்கு பல துறைகளில் தங்கள் திறமையைக் காட்டிலும் அனைத்திலும் சாதித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜேம்ஸ் வசந்தன். மெல்லிசைக் குழு நடத்துனராக, இசைப் பயிற்சியாளராக, தமிழ் ஆர்வலராக, நிகழ்த்தித் தொகுப்பாளராக, இசையமைப்பாளராக, பாடல் ஆசிரியாக, இயக்குனராக பல முகங்கள் கொண்டவர் ஜேம்ஸ் வசந்தன்.

இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த ஜேம்ஸ் வசந்தன் முதலில் இசை நிகழ்ச்சி தொகுப்பாளராக சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

   

   

அதன் பின்னர் அவர் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது, அவரிடம் பள்ளி காலத்தில் இசைப் பயின்ற மாணவரான சசிகுமார்தான். சுப்ரமண்யபுரம் படத்தில் தன்னுடைய வித்தியாசமான இசையால் முத்திரைப் பதித்த ஜேம்ஸ் வசந்தன் பெரிய இசையமைப்பாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதன் பிறகு பெரியளவில் படங்களுக்கு இசையமைப்பதில்லை. இந்நிலையில் சமீபகாலமாக அவர் இசையமைப்பாளர் இளையராஜாவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

 

இந்நிலையில் ஜேம்ஸ் வசந்தன் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் குறித்து பேசியுள்ளார். அதில் “ஹாரிஸின் பாடல்கள் சர்ச் பாடல்கள் போல மிக எளிமையாகதான் இருக்கும். ஆனால் அந்த எளிமையான ட்யூன்கள் எப்போதுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதற்கு ஹாரிஸ்தான் சாட்சி. எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்களில் அவரும் ஒருவர்” எனக் கூறியுள்ளார்.