இந்தியாவில் பல வெற்றிகரமான தொழில் நிறுவனங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் பிரபல மோட்டார் நிறுவனமான பஜாஜ். நம் அம்மா அப்பா காலத்தில் ஹீரோ ஹோண்டா நிறுவனங்களுக்கு இணையாக பஜாஜ் இன் மோட்டார்கள் மிகப் பிரபலமாக இருந்தது. அதன் வெற்றி கதை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

பஜாஜ் குழுமத்தின் தலைவர் ஜம்னாலால் பஜாஜ் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். வறுமை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்த பச்சிராஜ் பஜாஜ் என்னும் தூரத்து உறவினருக்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர் தத்துகொடுத்தப்பட்ட குடும்பம் வியாபாரத்தில் மிக சிறந்து விளங்கியது. வசதியான வியாபாரியான தனது தத்தெடுத்த தந்தைக்கு வலது கையாக பணியாற்றினார் ஜம்னாலால் பஜாஜ்.
1915ல் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். அப்போது காந்திஜியின் உதவியாளராக பணியாற்றிக் கொண்டே சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார் ஜம்னாலால் பஜாஜ். தன் தந்தை காலமானதும் ஜம்னாலால் பஜாஜ் காந்திஜியை தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளும்படி கூறினார். காந்திஜியின் விருப்பப்படி முதலில் சர்க்கரை ஆலை தொடங்கினார் ஜம்னாலால் பஜாஜ். சிறப்பாக பிசினஸை நடத்திக் கொண்டிருந்த ஜாமலாள் பஜாஜ் 1942 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தை பார்ப்பதற்கு முன்பே காலமானார்.
அதற்கு பிறகு அவரது மூத்த மகன் கமல்நயன் பஜாஜ் குழும தலைவரானார். இதற்கு பிறகு தான் பஜாஜ் டிரேடிங் கார்ப்பரேஷன் ஒன்றை ஆரம்பித்து ஆட்டோ ரிக்ஷாக்களையும் ஸ்கூட்டர்களையும் இறக்குமதி செய்து விற்கத் தொடங்கினார்கள். இது அமோக வரவேற்பு பெற்றது.
அடுத்த தலைமுறையினான 1965 ஆம் ஆண்டு கமல்நயனின் மகன் ராகுல் பஜாஜ் அமெரிக்காவில் எம் பி ஏ பட்டம் படித்து பிசினஸை தன்வசம் எடுத்துக்கொண்டு சிறப்பாக நடத்த ஆரம்பித்தார். தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார். அப்போது இந்தியாவில் அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இது ராகுல் பஜாஜுக்கு சவாலாக அமைந்தன. 1972 ஆம் ஆண்டு தந்தை கமல்நயன் மரணம் அடைந்த பிறகு ராகுல் பஜாஜ் ஆட்டோ குழுமத்தின் சேர்மன் ஆனார். அப்போது இவருக்கு 34 வயது தான்.

பஜாஜ் குழுமம் தனக்கு கீழ் வந்தவுடன் ராகுல் பஜாஜ் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்தார். அப்படி பிறந்தது தான் பஜாஜின் சேடக். இது அமோக வரவேற்பு பெற்று வெற்றி பெற்று விற்பனை நடந்து கொண்டிருந்தது. 2000களுக்கு பிறகு பல்சர் பைக்குகளை உற்பத்தி செய்து விற்பனையில் வெற்றி கண்டார் ராகுல் பஜாஜ்.
பஜாஜ் ஆட்டோமொபைல் மட்டுமல்லாமல் நிதி சேவைகளிலும் பஜாஜ் முன்னணியில் இருந்து வருகிறது. ஒரு சாதாரண சிறுவன் உருவாக்கிய பஜாஜ் நிறுவனம் இன்று 14 லட்சம் கோடி மதிப்பு கொண்ட நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. இன்னும் அடுத்தடுத்து புதிய திட்டங்களுடன் பஜாஜ் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
