குடிக்க இல்ல, குளிக்கவே மினரல் வாட்டர் கேட்ட SJ சூர்யா பட நடிகை.. கோபத்தில் இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா..?

By Nanthini on கார்த்திகை 26, 2024

Spread the love

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. இவருடைய உறவுக்கார பெண்ணான மீரா சோப்ராவும் ஒரு நடிகை தான். இவர் தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி ஹீரோவாக நடித்த அன்பே ஆருயிரே என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். பொதுவாக நடிகைகள் பலரும் சினிமாவுக்காக தனது பெயரை மாற்றிக் கொள்வது போல இவரும் தமிழில் அறிமுகமாகும் போதே நிலா என தன் பெயரை மாற்றிக் கொண்டார். அன்பே ஆருயிரே திரைப்படம் ஹிட்டானதை தொடர்ந்து இவருக்கு கோலிவுட்டில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது.

Bath scene... Actress asks for 12,000 litres of mineral water

   

அதன்படி லீ, ஜாம்பவான், காளை, மருதமலை மற்றும் ஜெகன் மோகினி போன்ற பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு தமிழில் மார்க்கெட் குறைந்ததை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் தென்னிந்திய திரை உலகில் இருந்து இவர் முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டார். அதன் பிறகு ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த மீரா சோப்ரா 41 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

   

40 வயதில் காதலரை கரம்பிடித்த எஸ்ஜே சூர்யா பட நடிகை: வைரல் புகைப்படங்கள் - மனிதன்

 

திருமணத்திற்கு பிறகு மற்ற நடிகைகளை போல சினிமாவில் இருந்து விலகினார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இவர் பிஸியாக நடித்த போது செய்த அலப்பறையை பிரபல இயக்குனர் ஒருவர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஜாம்பவான் திரைப்படத்தில் நடித்த போது குற்றால அருவியில் அவர் குளிக்கும் படியான காட்சி ஒன்று படமாக முடிவெடுத்து அதற்காக டேங்க் ஒன்றில் தண்ணீரை நிரப்பி மீரா சோப்ராவை நடிக்க அழைத்துள்ளனர்.

குளிக்க 12 ஆயிரம் லிட்டர் தண்ணி கேட்ட ஹீரோயின்!! நடிக்காமல் இடத்தை காலி செய்த மீரா சோப்ரா.. - விடுப்பு.கொம்

அங்கு வந்த அவர் ஐயையோ இந்த தண்ணீரில் எல்லாம் என்னால் குளிக்க முடியாது எனக்கு மினரல் வாட்டர் தான் வேண்டும் என கேட்டு அடம் பிடித்துள்ளார். 12 ஆயிரம் லிட்டர் பிடிக்கும் அந்த டேங்கில் எப்படி மினரல் வாட்டரை நிரப்புவது என்று கடுப்பான இயக்குனர் அந்த விஷயத்தை தயாரிப்பாளர் காதுக்கு கொண்டு சென்றுள்ளார். அவரும் அதெல்லாம் பண்ண முடியாது என்று கூறிய நிலையில் உடனே மீரா சோப்ரா கோபித்துக் கொண்டு படப்பிடிப்பை விட்டு கிளம்பிவிட்டார். இந்த தகவலை அப்படத்தின் இயக்குனரே சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.