விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகிணி எடுத்த பணத்தை கொண்டு வைத்து விட்டு பார்வதியிடம் இடம் போலீஸ் இடம் போக வேண்டாம் என்பது போல் கூறுகிறாள். அவர் போட்ட பிளானின் படி வீட்டில் அனைவரும் இருக்கும்போது பார்வதி போன் செய்து பணம் காணாமல் போகவில்லை என்று கூறுகிறார். உடனே அண்ணாமலை முத்து ஆகியோர் கோபப்பட்டு பணம் காணாம் போகல அங்கேதான் இருக்கிறது. ஆனால் மீனாவின் மீது பழி போட்டீங்க அப்படின்னு அதை வைத்து விஜயாவை பேசுகிறார்கள். அதனுடைய நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் ரோகினி தனது அம்மாவையும் மகன் க்ரிஷையும் ஊருக்கு வெளியே இருக்கும் வீட்டில் குடி அமர்த்துகிறார். வீட்டில் பால் காய்ச்சி சாமி கும்பிடுகிறார்கள். ஆனால் ரோகிணி ஒருவித பதட்டத்தோடு இருக்கிறாள். வீட்டை சுற்றி சுற்றி எட்டிப் பார்க்கிறாள். பிறகு அவள் அம்மாவிடம் யார்ட்டையும் பேசக்கூடாது யார்கிட்டயும் எந்த விவரமும் கூறக்கூடாது சொந்தக்காரங்களும் வீட்டிற்கு வரக்கூடாது யாருக்கும் இந்த அட்ரஸ் கொடுக்காதே என்று கண்டிஷன் மேல கண்டிஷன் போட்டுக் கொண்டிருக்கிறார்.
உடனே ரோகிணியின் அம்மா என்னடி இப்படி சொல்ற யார்கிட்டயும் பேசாம வைக்காம எப்படி இருக்க முடியும். சரி நான் இருப்பேன் கிரிஷ் எப்படி இருப்பான் அவன் சின்ன பையன் அவன் எப்படி வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பான் அப்படின்னு கேட்கிறார். உடனே ரோகிணி அவள பெரிய ஸ்கூல்ல தான் சேர்த்து இருக்கேன் அவனுக்கு அங்க பிரண்ட்ஸ் கெடப்பாங்க நீ தயவு செஞ்சு வீட்டுக்குள்ளே இரு முத்து மீனா கண்ணுல மட்டும் நீங்க பட்டுறவே கூடாது அதுக்கு தான் இவ்வளவு தூரம் உங்களை கொண்டு வந்து வச்சிருக்கேன் என்று பேசுகிறாள்.
அதற்கு அடுத்ததாக ரோகிணி அம்மாவையும் கிருஷையம் ஸ்கூலுக்கு கூட்டிக்கொண்டு சென்று அங்கு எல்லா ஃபார்மாலிட்டி முடிக்கிறார்கள். அந்த இடத்திற்கு அண்ணாமலையும் வேலை கேட்டு வருகிறார். என் மகனுக்கு சப்போர்ட் செய்வதற்காக நாம் இதை செய்ய வேண்டும் என்று வேலைக்காக சொல்லிவிட்டு வருகிறார். அதற்கு அடுத்ததாக முத்து சவாரி சென்று வந்தவுடன் இந்த ஏரியாவுல தானே க்ரிஷ் இருக்கான் நம்ம பார்த்துட்டு போயிரலாம் அப்படின்னு கிரிஷை தேடி வீட்டிற்கு செல்கிறான். ஆனால் அங்கு இல்லை அக்கம் பக்கத்தில் விசாரிக்கும்போது அவர்கள் கொஞ்ச நாளாகவே இங்கு இல்லை என்று கூறுகிறார்கள்.
ரோகிணி அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே முத்து போன் செய்கிறான். ஸ்பீக்கரை போட்டு நான் சொல்ற மாதிரி சொல்லு என்று ரோகினி தன் அம்மாவிடம் கூறுகிறாள். ரோகினி அம்மாவும் முத்து ஃபோனை எடுத்து பேசுகிறார். அப்போது முத்து அம்மா எங்கே இருக்கீங்க நான் உங்க வீட்டு முன்னாடி தான் இருக்கேன் நீங்க இல்ல போல இருக்கு கிரிஷை பாத்துட்டு போயிறலாம்னு வந்தேன் அப்படின்னு சொல்கிறான்.
உடனே ரோகிணியின் அம்மா முகத்தில் அடித்தார் போல இனிமேல் எங்களை பார்க்க வராதீங்க தம்பி என் பொண்ணு வேற ஊர்ல என்ன குடி வச்சுட்டா இனிமேல் எனக்கு போன் பண்ணாதீங்க எங்கள பத்தி கவலைப் படாதீங்க என்ற முகத்தில் அடித்தார் போல பேசி விடுகிறார். போனை கட் செய்த முத்து வீட்டிற்கு வருகிறான் வீட்டிற்கு வந்து மீனாவிடம் நடந்தவற்றை கூறி கொண்டு இருக்கிறான்.

இந்த நேரத்தில் ரோகினி ஒட்டு கேட்டுக் கொண்டே இருக்கிறாள். முத்து மீனா விடம் க்ரிஷோட பாட்டி ஏன் அப்படி பேசினார்கள் என்று எனக்கு தெரியல நம்மள அவாய்ட் பண்ற மாதிரியே பேசுறாங்க அப்படின்னு சொல்கிறான். உடனே மீனா அப்படியா அவங்களுக்கு நம்ம மேல ஏதும் கோபம் இருக்கா ஏன் இப்படி சொன்னாங்க அப்படின்னு கேட்கிறார்.
உடனே முத்து க்ரிஷ் சம்பந்தமாக ஏதோ ஒரு ரகசியம் இருக்குன்னு எனக்கு தோணுது சம்பந்தப்பட்டவங்க இந்த ரகசியம் தெரிஞ்சிட கூடாது அப்படின்னு நம்மகிட்ட பேசவிடாமல் தடுக்குறாங்கன்னு எனக்கு தோணுது. அதை சீக்கிரமா கண்டுபிடிக்கணும் என்று முத்துக்கு கூறுகிறார். வெளியே ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த ரோகிணி இது என்னடா புது பிரச்சனை என்று முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த ரோகினி என்றைக்கு மாட்ட போகிறார் என்று தெரியவில்லை.
