இதுதான் சாக்குன்னு வாய்க்கு வந்தபடி பேசிய பயில்வான்… பெரிய ஆப்பாக வைத்த AR ரஹ்மான்..!

By Soundarya on கார்த்திகை 25, 2024

Spread the love

இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள் ஒருவர் A.R ரஹ்மான். தற்போது இணையத்தில் A.R ரஹ்மான் விவகாரம் தான் பேச்சுப்பொருளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் AR ரஹ்மான் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான். இதை முதலில் அறிவித்தது இவருடைய மனைவி சாய்ரா பானு. சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலம் எனது கணவர் A.R ரஹ்மான் உடனான 29 வருட திருமண பந்தத்தில் இருந்து முறித்துக் கொள்வதாக அறிவித்தார். அதற்கு அடுத்ததாக A/R ரஹ்மான் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இதை உறுதி செய்தார். என்ன தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து விவகாரத்து நடக்கிறதே என ரசிகர்கள் பேசி வந்தனர்.

#image_title

AR ரஹ்மான் விவகாரத்து விஷயத்தை அறிவித்த ஒரு சில மணி நேரங்களிலேயே அவரது இசைக்கு குழுவில் இருந்த பேஸ் கிட்டரிஸ்டான மோகினி தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இதை வைத்து பல கட்டுக் கதைகள் சமூக ஊடகங்களில் நிலவி வந்தது.AR ரஹ்மானுக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்குமோ அப்படி இப்படி என்று பேசி வந்தார்கள்.குறிப்பாக youtube ல பிரபலங்கள் பலரும் மட்டுமல்லாமல் சில சினிமா விமர்சகர்களும் இவர்களுடைய விவகாரத்தை குறித்து வாய்க்கு வந்தபடி பேசி இருந்தார்கள்.

   
   

#image_title

 

பயில்வான் ரங்கநாதன் மற்றும் பழைய ஜார்னலிஸ்ட் பாண்டியன் என இருவருமே ஏ ஆர் ரகுமான் குறித்து அவதூறு பரப்பி வந்தார்கள். அவர் இசை குழுவில் இருக்கும் பெண் ஒருவரோடு இவரை சேர்த்து வைத்து பேசினார்கள்.  இதுதான் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை அதற்குத்தான் இந்த விவகாரத்தை முடிவு எடுத்ததாகவும் கூறியிருந்தார்கள். ரங்கநாதன் ஏ.ஆர் ரகுமான் பக்கத்தில் இருந்து அனைத்தையும் பார்த்தது போல வாய்க்கு வந்தபடி பேசினார். இவரை விட ஒரு படி மேலே சென்ற ஜார்னலிஸ்ட் பாண்டியன் ஏ ஆர் ரகுமான் அவருடைய மனைவியை கொடுமை படுத்தினார் என்றும் பேட்டி கொடுத்தார்.

இதனை அடுத்து இது எல்லாவற்றிற்கும் முடிவு கட்டும் விதமாக ஏ ஆர் ரகுமான் சட்டரீதியாக அணுகியுள்ளார். இதில்அவர் மீது அவதூறு பரப்பிய அனைத்து சமூக ஊடகங்கள் மீதும் கேஸ் போடும் முடிவில் இருக்கிறாராம். அவருக்காக ஆஜராக திறமையுடன் 100 வக்கீல்கள் களத்தில் இறங்க இருக்கிறார்களாம். இப்பொழுது இவருடைய அறிக்கைக்கு பயந்து நிறைய பேர் சமூக வலைதளங்களில் உள்ள வீடியோவையும் பதிவையும் நீக்கி உள்ளார்கள்.