தமிழ் சினிமாவில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் நடிகர்தான் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். மறைந்த மேயர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூலிலும் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்த நிலையில் தற்போது 300 கோடி வசூலித்து புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மெரினா திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தன் ஒவ்வொரு படங்களின் மூலமும் வசூலில் மெல்ல மெல்ல உயர்ந்த நிற்கிறார். இன்று அவருடைய படங்கள் 300 கோடி வசூல் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலிலா ஹீரோயினியாக நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட் படமான இந்த திரைப்படத்தின் மூலம் ஸ்ரீ லீலா கோலிவுட்டில் ஹீரோயினியாக அறிமுகமாகின்றார்.

சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீ லீலா நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 2k கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வரும் ஸ்ரீ லீலா தற்போது தமிழில் அறிமுகமாக உள்ளது தமிழ் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது. இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
