சினிமாவில் எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்ற கனவுடன் திரைப்படங்களில் பணியாற்றி பிறகு டவுன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியவர் தான் ஆகாஷ் பாஸ்கரன். திமுக அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதிக்கு மிக நெருக்கமானவர். ஆகாஷ் கவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சிகே. ரங்க நாதனின் மூன்றாவது மகள் தாரணையை திருமணம் செய்துள்ளார். தனது அப்பாவின் நிறுவனத்தை பார்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் தனக்கென்று தனியாக moonbaks நிறுவனத்தையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றார் தாரணி. இவர்களுடைய திருமணம் சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் இருவரும் முன்நின்றி நடத்தி வைத்தனர். அது மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் அன்பின் மகேஷ் உள்ளிட்டவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நயன்தாரா தனுஷ் விவகாரம் போய்க் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் இருவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அதுவும் நேர் எதிர் வரிசையில் அமர்ந்து கொண்டு யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இவர்களைத் தவிர்த்து அனிருத், சிவகார்த்திகேயன், அட்லி, தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் சிவன் மற்றும் ஆர். ரவிக்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். மேலும் தனுசை சந்தித்த சிம்பு அவரை கட்டி அணைத்து தனது அன்பை பரிமாறி கொண்டார். அதனைப் போலவே திரை பிரபலங்கள் பலரும் சந்தித்துக் கொண்டனர். இப்படியான நிலையில் தயாரிப்பாளர் திருமணத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற வாட்ட கருவாடு பாடலுக்கு தனுஷ் நடனமாடியுள்ளார். அதை தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
. @dhanushkraja – @Siva_Kartikeyan 🤗❤️
What a karuvad vibes !! pic.twitter.com/OBuBhD7WQS
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) November 24, 2024
