mgr rmv

MGR ரிடம் ஜெயலலிதாவை பற்றி அறிவுரை கூறிய RM வீரப்பன்… மனவருத்தப்பட்ட புரட்சி தலைவர்…

By admin on கார்த்திகை 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர் MGR. தான் வாழ்ந்த காலத்தில் தனக்கென தனி பாதை கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தவர் MGR.

   

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகள் திராவிட சிந்தனைகள் சமூக நீதி கருத்துக்கள் இருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். எம்ஜிஆர் படங்கள் வந்தாலே ஹிட்டு தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.

   

தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பிய MGR அரசியலில் பணியாற்றி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்குவரையிலும் பணியாற்றியவர் MGR. எம்ஜிஆர் மிகவும் நல்ல மனிதராக இருந்திருக்கிறார்.

 

MGR நல்ல மனிதர் மட்டுமல்ல உதவும் மனப்பான்மை கொண்டவர். தன்னை தேடி வந்தவருக்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து அனுப்புபவர். எம்ஜிஆர் உடனே அவர் நலனுக்காக பயணித்தவர் RM வீரப்பன். எம்ஜிஆர் உடன் அதிகம் நடித்து பிரபலமானவர் ஜெயலலிதா. ஜெயலலிதா பற்றி RM வீரப்பன் ஒரு அறிவுரையை எம்ஜிஆர் இடம் கூறி இருக்கிறார். இது அவர் மனதை கஷ்டப்படுத்தி இருக்கிறது.

அது என்னவென்றால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவை நடிக்க வேண்டும் என்று கூறினாராம். அப்போது RM வீரப்பன் பத்திரிகைகளில் உங்களையும் ஜெயலலிதாவும் வைத்து எழுதுகிறார்கள். இது உங்களது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று கூறியிருக்கிறார் RM வீரப்பன். இதனால் அரை மனதுடன் ஜெயலலிதாவை வேண்டாம் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர். ஆனால் அவர் ஜெயலலிதாவுக்கு என்று தன் மனதில் தனி இடத்தை வைத்து இருந்தார் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.