தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார். இவர் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

குறிப்பாக காவலா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி கொண்டிருக்கிறது. தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இதனைத் தவிர பல படங்களிலும் கமிட் ஆகியுள்ள நிலையில் அந்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தவிர பல படங்களிலும் கமிட் ஆகியுள்ள நிலையில் அந்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். நடிகை தமன்னாவுக்கு 35 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதாகவும் சமூகவலைதள பக்கத்தில் அறிவித்தார்.

பல விருது விழாக்களில் தமன்னா தனது காதலருடன் ஜோடியாக வந்து கலந்து கொண்டுள்ளார். திருமணம் குறித்து கேள்வி எழுப்பும்போதெல்லாம் தமன்னாவும் விஜய் வர்மாவும் தெளிவான பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் இவர்கள் இருவரும் அடுத்த வருடம் 2025 ஆம் வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
