“தயவுசெஞ்சி அத பண்ணாதீங்க, அவர் ஒரு உயர்ந்த மனிதர்”.. விவகாரத்திற்கு பிறகு மௌனம் களைத்த ஏ.ஆர் ரகுமான் மனைவி..!

By Nanthini on கார்த்திகை 24, 2024

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ.ஆர் ரகுமான். ஆஸ்கார் விருது பெற்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா மற்றும் ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் இசையமைப்பாளராக முயற்சி மேற்கொண்டு வருகின்றார். சமீப காலமாகவே தன்னுடைய அப்பாவுடன் பல மேடைகளில் தோன்றி வருகிறார். இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இவர்களின் இந்த விவாகரத்து செய்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எல்லாமே எதிர்பாராத முடிவாக உள்ளன- ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்- AR Rahman says We  had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an  unseen end

   

இதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து அறிவித்த அடுத்த 1 மணிநேரத்திலேயே அவரிடம் பணியாற்றி வரும் இசைக்கலைஞரான மோகினி டே என்பவரும் தன் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் இருவரையும் தொடர்புபடுத்தி சில செய்திகள் வெளிவந்தது. இதனால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான், தன்னைப்பற்றிய அவதூறு கருத்துக்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

   

கடவுளின் சிம்மாசனம் கூட...” - விவாகரத்து குறித்து ஏ.ஆர் ரஹ்மான் | nakkheeran

 

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா முதன்முறையாக விவாகரத்து பற்றி மனம் திறந்து பேசி உள்ளது. அதில் அவர் தற்போது மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2 மாதங்களாவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால் சாய்ரா மும்பையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தன் உடல்நிலை காரணமாகவே தான் ஏ.ஆர்.ரகுமானை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தேன். மேலும் ஏ.ஆர்.ரகுமான் அற்புதமான மனிதர். அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள். அவரை வாழ்நாள் முழுவதும் நம்புவேன், எங்களது விவாகரத்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அவர் வைரம் போன்ற மனிதர் என்று தன்னுடைய கணவரை புகழ்ந்து சாய்ரா பானு பேசிஉள்ளார்.