seeman

என்ன சீமான்… ரஜினி சார் பத்தி நீ என்ன பேசினேனு மறந்து போச்சா… அடுத்த வீடியோ வெளியிட்ட விஜயலக்ஷ்மி…

By admin on கார்த்திகை 23, 2024

Spread the love

சீமான் தமிழ் சினிமாவில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர் நடிகர் தற்போதைய அரசியல்வாதி ஆவார். கல்லூரி படிப்பை முடித்த சீமான் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தார். பின்னர் இயக்குனர்கள் மணிவண்ணன் பாரதிராஜா ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சீமான்.

   

சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். பிரபு, மதுபாலா ஆகியோர் நடித்த பாஞ்சாலங்குறிச்சி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனாக அறிமுகமானார் சீமான். இந்த படம் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்ததாக இவர் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மாதவன் பூஜாவை வைத்து தம்பி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

   

அதற்கு அடுத்ததாக 2007 ஆம் ஆண்டு மறுபடி மாதவனை வைத்து வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார் சீமான். இந்த திரைப்படத்தில் தான் நடிகை விஜயலட்சுமியை சந்தித்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் உறவில் இருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியாது. ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு அப்படி எதுவும் இல்லை என்று சீமான் கூறினார்.

 

2010 ஆம் ஆண்டு சீமான் நாம் தமிழர் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். சீமானை எதிர்த்து அவ்வபோது விஜயலட்சுமி குரல் கொடுப்பது வழக்கம். சீமானுக்கு எதிராக போலீசில் புகார் செய்வது நான் சாகப் போகிறேன் சீமான் என்னை ஏமாற்றி விட்டார் என்று பல வீடியோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

சமீபத்தில் சீமான் ரஜினிகாந்த அவர்களை சந்தித்து இருக்கிறார். அது தொடர்பாக தற்போது விஜயலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் என்ன சீமான் ரஜினி சார் பற்றி நீ சொன்னது மறந்து போச்சா அவர் ஒரு கன்னடத்தவர் அவர் எப்படி இங்கு இருக்கலாம் என்று அப்படி இப்படி நீ பேசினியே ன்று விஜய் சார் அரசியலுக்கு வந்த உடனே வேறு வழியில்லாமல் ரஜினி சார் கால்ல போய் விழுகிறாயா என்று பச்சை பச்சையாக கிழித்து எடுத்திருக்கிறார் விஜயலட்சுமி. மேலும் மக்களிடம் இந்த சீமானை நம்பாதீர்கள் என்று கூறி வீடியோ பதிவிட்டு இருக்கிறார்.