ரஜினிகாந்த் அடிமட்டத்தில் இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்து உயரத்தில் இருப்பது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் ரஜினியின் ஆரம்பகால படங்கள் தான் என்றே சொல்லலாம். இன்று அவர் ஜாம்பவான் ஆவதற்கு முன் அவர் எடுத்து வைத்த படிகள் தான் இந்த நிலைமைக்கு கொண்டு வண்ணத்துள்ளது. சூப்பர் ஸ்டாருக்கு 70 வயதாகும் முன்பே, அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் இடையில் வில்லனாகவும் சாதாரண ஹீரோவாகவும் நடித்தார். இவர் ஆரம்பகட்டத்தில் நடித்து பிரபலமான படங்கள் குறித்து பார்க்கலாம்.

அபூர்வ ராகங்கள் படத்தை டைரக்டர் கே.பாலசந்தர் இயக்கினார். இவர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு. அபூர்வ ராகங்கள் கதையானது புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும். இதில் ரஜினி அழகாக நடித்து பிரபலமானார்.

கே பாலசந்தர் இயக்க்கிய திரைப்படம் அவர்கள். இந்த பபிடத்தில் ஆண்களில் மூன்று தேர்வுகளை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதை. கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். சுஜாதா கதாபாத்திரத்தில் ஜெயசுதாவும், ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவியும் நடித்தனர்.

புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் இயக்குனர் எஸ்.பி முத்துராமன் மற்றும் ரஜினியின் முதல் கூட்டணி. இது இரண்டு நண்பர்களின் கதை . ஒருவர் விளையாட்டுப்பிள்ளை, மற்றவர் நீதிமான். சிவக்குமார் மூத்தவராகவும், ரஜினி இளையவராகவும் நடித்திருப்பார். சுமித்ரா தனது நண்பரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டதைக் கண்டதும், ரஜினி அவளது உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கிறார். இந்த படத்தில் தனது அசாத்திய நடிப்பால் ரஜினி மக்களின் இதயங்களை வென்றார்.
![]()
இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. ஸ்டுடியோ சூழலை விட்டு கிராமப்புறங்களுக்கு நகர்ந்த ஆரம்பகால தமிழ் படங்களில், 16 வயதினிலே என்பது கிராமத்து பெண்ணான மயிலுவின் கதையாகும். இதில் ஸ்ரீதேவி நடித்தார், அவர் 16 வயதாகி ஆண்களின் கண்களை ஈர்க்கத் தொடங்குகிறார். கமல்ஹாசன் அவளை காதலிக்கும் நொண்டி சப்பானியாக நடித்தார். அழகான கமல் ஒரு பாத்திரத்திற்காக தன்னை இப்படி ஒரு கெட்டப்பில் மாற்றிக்கொண்டது இதுவே முதல் முறையாகும். இதில் ரஜினிகாந்த் கிராமத்து ரவுடியான பரட்டையாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார்.

எஸ் பி முத்துராமனின் ஆடு புலி ஆட்டம் திரைப்படம் தமிழ்நாட்டின் பலகை விளையாட்டைக் குறிக்கிறது. இந்த படம் வேட்டையாடுதல், இது ஒரு கிரிமினல் கும்பலின் ஒரு பகுதியாக இருக்கும் இரண்டு நண்பர்களான கமல்ஹாசனுக்கும் ரஜினிகாந்துக்கும் இடையில் நடக்கிறது. மேலும் படத்தில் கமல் தனது அசல் கனவான போலீஸ் படைக்கு செல்லவும், எதிரியாக மாறிய தனது நண்பனை வேட்டையாடவும் கட்டாயப்படுத்துகிறது.

இளமை ஊஞ்சல் ஆடுகிறதே படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்தார்கள். இந்த படம் ஒரு முக்கோண காதல் கதை. நடிகை ஸ்ரீப்ரியா இருவரின் பாசத்திற்கும் மையமாக உள்ளது. படத்தில் வில்லன் கிடையாது. ஆகவே பழிவாங்கல், ரத்தக்களறிக்கெல்லாம் வேலையே இல்லை. சம்பவங்களும் சூழ்நிலைகளும்தான் வில்லன். காமெடிக்கு தனி டிராக்கெல்லாம் போடவில்லை. படத்தின் இடையில் ஆங்காங்கே சிரிக்கவும் ரசிக்கவும் ரசித்துச் சிரிக்கவும் வைக்கிற காமெடிகளை மட்டுமே மிகையில்லாமல் பயன்படுத்தியிருப்பார் இயக்குனர் ஸ்ரீதர்.

மூன்று முடிச்சு 1976 ஆம் ஆண்டு வெளிவந்த படம். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சங்கர் சலீம் சைமன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பணக்கார சதாசிவத்தின் மகன் சங்கர். அவனுடைய தங்கை வசந்தி. கடற்கரையையொட்டி இருக்கிற அயோத்தியா குப்பத்தில் வாழ்கிறார்கள் சைமனும் சலீமும். சலீம் நல்ல வேலைக்காகக் காத்திருக்கிறான். அதே ஏரியாவில் டீக்கடை நடத்துகிற இஸ்லாமியப் பெரியவரின் மகள் மும்தாஜைக் காதலிக்கிறான். அவளும் விரும்புகிறாள் இது தான் படத்தின் கதை.

முள்ளும் மலரும் படம் மகேந்திரன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்தது. கல்கி இதழில் தொடர் கதையாக உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபா ஆகியோர் நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா.

ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் சிறுவயதிலேயே உடன்பிறந்தவர்களை வளர்க்கும் மூத்த மகனாக ரஜினி நடித்துள்ளார். எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக அவர் அவர்களை பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க வைக்கிறார், மேலும் அவர்கள் வெற்றிபெறும்போது அவர்கள் தனது வறுமையை கேலி செய்கிறார்கள் மற்றும் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தார். ரஜினியின் கதாபாத்திரம் ஆறிலிருந்து 60 வரை செல்கிறது . இதுதான் படத்தின் கதை..

பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். ரஜினிகாந்தின் முதல் இரட்டை வேடமும், வழிகாட்டியான பாலச்சந்தரின் ஹோம் புரொடக்ஷனும் இந்த படத்தில் பொருத்தமாக இருந்தது. ரஜினி தந்தை மற்றும் மகனாக நடித்திருப்பார். இருப்பினும், புதிய விஷயம் என்னவென்றால், தந்தை ஒரு பாலியல் அடிமையாக நடித்திருப்பார். இந்த படத்தில் ரஜினி அப்படியொரு நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

தப்புத்தாளங்கள் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல், சரிதா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம். ரஜினியின் ஆரம்பகால திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ரஜினியின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம் இதுவே. சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் வாழ்வியலை, இருட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கையைச் பிரதிபலித்ததுதான் படத்தின் கதை.
