thiruneeru

திருநீறு அணிவது எதற்காக தெரியுமா…? அதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா…?

By admin on கார்த்திகை 23, 2024

Spread the love

இந்து மத வழிபாட்டில் நெற்றியில் திருநீறு குங்குமம் சந்தனம் இடுவது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக திருநீறு சந்தனம் குங்குமம் அணிவது மதத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்குப் பிறகு அறிவியல் சார்ந்த உண்மைகள் இருக்கிறது. திருநீறு அணிவது எதற்காக முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

சாஸ்திர முறைப்படி ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நெற்றியில் திருநீறோ சந்தனமோ குங்குமமோ ஏதோ ஒன்று இட்டுக்கொள்ள வேண்டும் வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது. திருநீறு வைத்துக் கொள்வதற்கு என்றே சில முறைகள் இருக்கிறது. சரியான இடத்தில் திருநீறு வைக்கும் போது தான் அந்த இடத்தில் இருக்கும் நரம்புகள் தூண்டப்பட்டு அதனால் நமக்கு பலன் கிடைக்கும். இதுவும் ஒரு வகையான தொடு வர்மம் போல தான்.

   

திருநீறு சந்தனம் குங்குமம் எதுவாக இருந்தாலும் அதை வைக்கக்கூடிய இடம் இருபுறங்களுக்கு மத்தியில் தான் அதை வைக்க வேண்டும். இந்த இடத்தை தான் ஆகாய சக்கரம் என்று கூறுகிறார்கள். இந்த இடம் கண்களின் உள்ளுணர்வுக்கு தொடர்புடையது. மேலும் தியானம் செய்யும்போது ஒருமுகப்படுத்த கூடிய இடமும் அதுதான்.

 

இரு புருவங்களுக்கு இடையே இருக்கும் பகுதியில் தான் நம் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த கட்டுப்பாடும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் அந்த இடத்தில் நாம் அழுத்தம் கொடுத்து திருநீறு சந்தனம் குங்குமம் வைக்கும் போது எதிர்மறை ஆற்றல்கள் தோன்றாமல் நேர்மறை ஆற்றல்கள் தோன்றுவதற்கு உதவி செய்யும். மனச்சோர்வு நீங்கும் நினைவாற்றலை பெருக்கும் மற்றும் சிந்தனை தெளிவாகும் என பல நன்மைகளை தாருகிறது.

சாஸ்திர ரீதியாக பார்க்க போனால் நம் உடம்பே கோவில் மனதே தெய்வம் என்பது போல நம் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடத்தில் தான் அனைத்து தெய்வங்களும் குடிக் கொண்டிருக்கிறது என்பது பொருள். அதனால் சாஸ்திர ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் இந்த திருநீறு அணிவதற்கு பின்னால் பல அதீத நன்மைகள் இருக்கிறது. இனி தவறாமல் திருநீர் அணியும் போது இதையெல்லாம் நினைத்துக் கொண்டு அணியுங்கள்.