floating restaurant

சென்னை மக்களுக்கான Super Spot… வரவிருக்கிறது மிதக்கும் உணவகம்…

By admin on கார்த்திகை 22, 2024

Spread the love

சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றது. சென்னைக்கு அருகிலேயே மகாபலிபுரம் இருக்கிறது. இது பிரபலமான சுற்றுலா தளமாகும். அதுபோலவே சென்னைக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக சென்னை மக்களுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய ஒரு புதுமையான ஒரு ஸ்பாட் உருவாக இருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.

சென்னை அருகே இருக்கும் முட்டுக்காட்டில் ஏரியின் அழகை ரசித்தபடியே உணவருந்தும் வகையில் மிதவை உணவகம் மக்கள் பயன்பாட்டிற்காக தயாராகி வருகிறது, சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது முட்டுக்காடு படகு துறை.

   

   

இந்த முட்டுக்காடு படகுத்துறையில் 100 பேர் அமர்ந்து ஏரியின் அழகை ரசித்தவாறு உணவருந்த கூடிய மிதக்கும் உணவகம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இதுதான் தமிழகத்தின் முதல் மிதக்கும் உணவகம் ஆகும். இந்த மிதக்கும் உணவகத்தில் இரண்டு அடுக்கு இருக்கிறது. கீழ் அடுக்கில் அமர்ந்து உணவருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அதற்கு மேல் அடுக்கில் இயற்கையை ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மிதக்கும் உணவகம் 125 அடி நீளமும் 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பாக தயாராகி வருகிறது.

 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கொச்சியை சேர்ந்த க்ராண்டியூர் மறைன் இன்டர்நேஷனல் மூலமாக இந்த மிதவை உணவகம் செயல்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ரூ 5 கோடி மதிப்பீட்டில் இந்த மிதவை உணவகம் தயாராக இருக்கிறது. தற்போது திறப்பு விழாவுக்கு இந்த மிதவை உணவகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் இது திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.