தமிழ் சினிமாவில் சினிமா பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து விவகாரத்தை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மிகச்சிறந்த இசையமைப்பாளர்களான இமான், ஜிவி பிரகாஷ் போன்றவர்கள் தங்களுடைய மனைவியை பிரிந்த இந்த விஷயமே ரசிகர்கள் மனதில் இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் மிக மூத்த இசையமைப்பாளராகவும் மிகச் சிறந்த மனிதனாகவும் திகழ்ந்து வந்தவர் ஏ.ஆர் ரகுமான். பல மேடைகளில் தன்னுடைய மனைவி மீது இருக்கும் காதலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அவர் மனைவி சாய்ரா பேகம் தன்னுடைய கணவர் ரகுமானை மிகுந்த மன வருத்தத்தோடு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

#image_title
இது குறித்து அவருடைய வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில் கடந்த சில மாதங்களாகவே ரஹ்மான் மற்றும் சாய்ரா இடையே உணர்ச்சிபூர்வமான பல விஷயங்கள் நடந்து வந்தது. இந்த சூழலில் தான் சாய்ரா கடுமையான முடிவை எடுக்க நேரிட்டிருக்கிறது. ரகுமானிடம் இருந்து பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஏ.ஆர் ரகுமான், நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அனைத்துமே எதிர்பாராத முடிவுகளை தான் கொண்டுள்ளது.

#image_title
கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும் உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்தில் உங்கள் அன்பிற்கும் எங்கள் தனி உரிமயை மதித்ததற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். கடந்த 1995 ஆம் வருடம் இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர் . தன்னுடைய தாய் தந்தையின் பிரிவை குறித்து அவர் மிகப்பெரிய மனக்கலக்கத்தை ஏற்படுத்திய சூழலில் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் தேவையான அந்த தனிப்பட்ட நேரத்தை கொடுக்குமாறு தாழ்மையுடன் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .

#image_title
இதிலிருந்து மீண்டு வர தங்களுக்கு இந்த தனிமை தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். எங்களுடைய தனி உரிமையை மதிக்குமாறு அனைவருடைய அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி என்று கூட அவருடைய மகன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆடு ஜீவிதம் படத்திற்காக ஹாலிவுட் இசை விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறியுள்ளார்.
எல்லா புகழும் இறைவனுக்கே.. ஆடு ஜீவிதம் படத்திற்காக ஹாலிவுட் இசை விருது.. ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி!#ARRahman #Aadujeevitham #HollywoodMusicAwards #HMMA #TheGoatLife #NewsTamil24x7 pic.twitter.com/LQpzUYlPgw
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) November 22, 2024
