தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் உழைப்பினால் உயர்ந்தவர். சின்னத்திரை விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மிமிக்ரி செய்பவராக தனது கேரியாரை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். அதன்மூலம் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் மெல்ல மெல்ல காமெடி கதை அம்சம் கமர்சியல் திரைப்படம் என மெல்ல அடியெடுத்து வைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில படங்களையும் தயாரித்தும் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தற்போது தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று 300 கோடி வசூலித்து இன்றளவும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது இந்த படத்திற்கு சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. அது என்னவென்றால் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் வரும் காதல் காட்சியில் சாய் பல்லவி இதுதான் என்னுடைய போன் நம்பர் என்று ஒரு நம்பரை சிவகார்த்திகேயனிடம் கூறியிருப்பார். அந்த நம்பரை வைத்திருக்கும் பொறியியல் மாணவர் வாகீசன்.

மாணவர் வாகீசன் தற்போது அமரன் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தனக்கு 1.1 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு காரணம் என்னவென்றால் படம் வெளியான நாளிலிருந்து என்னால் தூங்கவோ படிக்கவோ எந்த வேலையோ செய்ய இயலவில்லை தொடர்ந்து போன் கால் வந்து கொண்டே இருக்கிறது என்று மனவேதனையுடன் புகார் வைத்திருக்கிறார். இது என்னடா அமரன் படத்திற்கு வந்த சோதனை என்பது போல் இருக்கிறது. அவர்கள் செய்த சிறு தவறால் இப்போது படக்குழுவே சிக்கலில் மாட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
