எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படத்திற்கு இசையமைக்க மறுத்த எம்.எஸ்.வி.. காரணத்தைக் கேட்டா நீங்களே ஆடிப் போயிருவீங்க..!

By Nanthini on கார்த்திகை 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்பட்டவர் தான் எம் எஸ் விஸ்வநாதன். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடிகராக கூட நடித்துள்ளார். தொடக்கத்தில் பல இசை அமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர் டி கே ராமமூர்த்தி உடன் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். அதனைப் போலவே எம்ஜிஆர் நடிப்பில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சின்னப்ப தேவர் தான் தயாரித்த படங்களுக்கு இசையமைப்பாளர் கே.வி மகா தேவனை பயன்படுத்தி உள்ளார்.

எம்எஸ் விஸ்வநாதன்... காற்றுள்ள வரை காதுகளில் ரீங்கரிக்கும் ஒரு மாபெரும் கலைஞன்! | Complete biography of MS Viswanathan - Tamil Oneindia

   

ஆனால் ஒரு கட்டத்தில் எம்எஸ்வி ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இணைந்ததும் அவருடைய இசையில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று சின்னப்ப தேவர் நினைத்துள்ளார். அந்த சமயத்தில் தான் எம்ஜிஆர் நடிப்பில் வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்த நிலையில் அந்தப் படத்திற்கு எம் எஸ் வி இசையமைக்க கேட்டபோது அவருடைய தாயார், தேவர் பிலிம்ஸ்ல் கே.வி மகாதேவன் இசையமைத்து வருகின்றார், அதனால் அவர் இசையமைக்க வேண்டிய படத்திற்கு நீ இசை அமைக்க கூடாது என்று எம் எஸ் வி இடம் கூறியுள்ளார். இதனை கேட்ட எம்.எஸ்.வி வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு இசையமைக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

   

 

அதன் பின்னர் அந்த படத்திற்கு கேவி மகாதேவனே இசை அமைத்தார். எம் எஸ் வி இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு கோரஸ் பாடி கொண்டு இருந்த சமயத்தில் அவரை அழைத்த கேவி மகாதேவன், நீ இங்கே இப்படி இருந்தால் அனைவரும் உன்னை கோரஸ் விஸ்வநாதன் என்று சொல்வார்கள் இதனால் நீ சென்னைக்கு போய் இசை அமைத்து முன்னேறும் வழியை பார் என்று சொல்லி அவருக்கு பணம் மற்றும் துணி எடுத்துக் கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளார். இதனால்தான் எம்.எஸ்.வி தாயார் கேவி.மகாதேவன் இசையமைக்கும் கம்பெனிக்கு நீ இசையமைக்க கூடாது என்று தன்னுடைய மகன் எம்.எஸ்.வி இடம் கூறியுள்ளார்