முடிவுக்கு வரும் சுந்தரி சீரியல்.. டிஆர்பியை உயர்த்த 2 புதிய சீரியல்களை களமிறக்கும் சன் டிவி..!

By Nanthini on கார்த்திகை 21, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களில் பெரும்பாலான சீரியல்கள் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோட்களை நெருங்கிய பிறகு தான் முடிவுக்கு வரும். அதுவும் சில சீரியல்கள் எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு இழுத்தடிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருவதால் சன் டிவியில் திடீரென்று எடுத்த முடிவு என்னவென்றால் எந்த சீரியல் TRB ரேட்டிங்கில் அடிபடுகின்றதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள். அதன்படி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய முக்கியமான சீரியல்கள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வரும் நிலையில் சுந்தரி சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது.

சுபம் போடும் சுந்தரி சீரியல்! வருத்ததில் ரசிகர்கள்! என்ன தான் ஆச்சு?

   

வெற்றிகரமாக ஓடிய சுந்தரி தொடர் தற்போது முடிவுக்கும் வர இருக்கிறது, கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து மிஸ்டர் மனைவி மற்றும் இனிய உள்ளிட்ட சீரியல்களும் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளன. சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் என தொடர்ந்து நிறைய சீரியல்கள்  TRBயில் டாப்பில் இருந்து வருகிறது.

   

Aadukalam - Promo | New Tamil Serial | Coming Soon | Sun TV - YouTube

 

இந்த நிலையில் அடுத்ததாக புதிய தொடர்களை சன் டிவி ரசிகர்களுக்காக களமிறக்க உள்ளது. அதன்படி தற்போது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அன்னம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் விரைவில் வர உள்ளது. அதனைப் போலவே ஆடுகளம் என்ற புதிய சீரியலும் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. சுந்தரி சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில் அந்த சீரியல் ஒளிபரப்பாகும் இரவு 7 மணிக்கு இந்த இரண்டு புதிய சீரியல்களில் ஏதாவது ஒன்று ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

Annam - Promo | New Tamil Serial | Coming Soon | Sun TV - YouTube