முதலில் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவிற்கு தடையறத் தாக்க திரைப்படம் மூலமாக என்ட்ரி கொடுத்தவர். அதன் பிறகு நடிகர் கார்த்தி உடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் துருதுருவென நடித்த இளசுகளின் பேவரைட் ஹீரோயினியாக இடம் பிடித்தார்.

அதோடு இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். மேலும் உலகநாயகன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 3 திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகி.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் தனது நீண்ட நாள் காவலரை கரம் பிடித்தார்.

சீக்கிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது ஓவர் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
