இசையமைப்பாளர் AR ரஹ்மானுக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த இசையாமைப்பாளர்களுள் ஒருவர் AR ரஹ்மான். தமிழ் சினிமாவை உலக அளவுக்கு எடுத்து சென்றவர் AR ரஹ்மான். ஆஸ்கர் விருது வென்று தமிழகத்தை உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தவர் AR ரஹ்மான். பல திறமைகளை தன்னுள் கொண்டு இருந்தாலும் எளிமையான மனிதராகவே பலராலும் அறியப்படுகிறார் AR ரஹ்மான்.

ஆனால் தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி கொண்டிருக்கும் விஷயம் AR ரஹ்மான் தனது மனைவியுடன் விவாகரத்து என்று கூறிய விஷயம் தான். நேற்று இரவு AR ரஹ்மானின் மனைவியான சாய்ரா பானு தனது கணவருடனான 29 வருட திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்தார். இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் எதற்காக இவர்கள் பிரிகிறார்கள் என்ன காரணமாக இருக்கும் ஒரு இடத்திலும் கூட தன் குடும்பத்தை பற்றி தவறாக இதுவரை AR ரஹ்மான் தரப்பில் பேசியதும் கிடையாது. இவர்கள் குடும்பம் சார்ந்த விஷயங்கள் இதுவரை பெரிதாக வெளிவந்ததும் கிடையாது. இது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று பலர் பேசி வருகின்றனர்.
AR ரஹ்மான் திருமணம் எப்படி நடந்தது சாய்ரா பானு எப்படி AR ரஹ்மான் வாழ்க்கையில் நுழைந்தார் திருமணத்திற்கு AR ரஹ்மான் போட்ட மூன்று கண்டிஷன்கள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி இனி காண்போம். AR ரஹ்மான் சினிமாவில் நுழைந்து பிரபலமாகிக் கொண்டிருந்த நேரத்தில் AR ரஹ்மானின் தாயார் கரீனா பேகம் அவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் தேடிக் கொண்டிருந்தார்.
திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கும்போதே AR ரஹ்மான் தனக்கு வரப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று மூன்று கண்டிஷன்களை போட்டு இருக்கிறார். அதில் முதலாவது வரக்கூடிய பெண் படிப்பறிவு கொண்டவராகவும் இசையை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவது அனைவரிடமும் மரியாதையுடன் பழக வேண்டும். மூன்றாவது அந்தப் பெண் அழகாக இருக்க வேண்டும் என்ற மூன்று கண்டிஷன்களை தனது தாயாரிடம் கூறியிருக்கிறார் AR ரஹ்மான்.
ஒரு நாள் AR ரஹ்மானின் தாயார் சென்னையில் ஒரு தர்காவிற்கு செல்லும்போது சாய்ரா பானுவை பார்த்தவுடன் அவருக்கு பிடித்து போகிறது. உடனே அவரைப் பற்றி விசாரித்து திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்கிறார் AR ரஹ்மானின் தாயார். தனது 28 வது பிறந்தநாள் அன்று தான் முதன் முதலாக சாய்ரா பானுவை நேரில் சந்தித்தார் AR ரஹ்மான். இருவருக்கும் பிடித்து போய்விடுகிறது.

1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் AR ரஹ்மானுக்கும் சாய்ரா பானுக்கும் திருமணம் நடைபெறுகிறது. அப்போது AR ரஹ்மானுக்கு வயது 27 சாய்ரா பானுவின் வயது 21 ஆகும். அன்றிலிருந்து தற்போது வரை AR ரஹ்மானின் அனைத்து பயணங்களிலும் உறுதுணையாக சாய்ரா பானு இருந்திருக்கிறார். இதை பல நேர்காணல்களில் AR ரஹ்மானே தெரிவித்திருக்கிறார். ஆனாலும் 29 வருடங்கள் கடந்த நிலையில் இவர்கள் பிரிவு என்பது சினிமா வட்டாரங்கள் ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
