தென்னிந்திய சினிமா அளவில் தற்போது இளசுகளின் கனவு கன்னியாக இருப்பவர் தான் நடிகை ஸ்ரீலீலா. 2019 ஆம் ஆண்டு கிஸ் என்ற கன்னட திரைப்படம் மூலமாக திரையுலகில் ஹீரோயினியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பெல்லி சண்டாடி என்ற திரைப்படம் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார்.

இந்த படத்தில் இடம்பெற்ற மதுரா நகரிலோர் என்ற பாடலில் இவர் ஆடிய நடன அசைவுகள் பலராலும் வெகுவாக ஈர்க்கப்பட்டது. அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் சமீபத்தில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் அப்படத்தில் இடம்பெற்ற குறிச்சி மடத்து பெட்டி என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறார்.

ஒத்த பாடலுக்கு நடனம் ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டுள்ளார். அதேசமயம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள புஷ்பா 2 படத்திலும் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

