சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரஜினிகாந்த் தமிழக அரசின் திரைப்பட விருது ஆறு முறை வென்றார். சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதுகளும் ரஜினிகாந்த் கிடைத்தது. . சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் முதலில் நம் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் அவர்கள் தான். தமிழ் சினிமாவில் தற்போது வரை ஹீரோவாக கொடிகட்டி பறந்து வரும் ரஜினிகாந்த் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. தொடர்ந்து ஹிட்டுக்காக காத்துக் கொண்டிருந்த ரஜினி அவருக்கு ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவர் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

ரஜினி ஆரம்ப கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதனை மாற்றி முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் பைரவி. 1978 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் வித்தியாசமாக ஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்த் வில்லனாகவும், வில்லனாக நடித்த ரஜினியை ஹீரோவாகவும் நடிக்க வைத்தார்கள். ரஜினி ஹீரோவாக மக்கள் மனதில் சென்றடைவதற்கு வைத்த பைரவி படத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் அழகாக வைத்து உருவாக்கி இருந்தார்கள்.

விபத்து ஒன்றில் சிறுவயதிலேயே ரஜினி அவருடைய தங்கையாக நடித்த கீதாவும் பிரிந்து விடுவார்கள். வளர்ந்த பிறகு இருவருக்கும் தாங்கள் அண்ணன் தங்கை என்பது தெரியாமலேயே மோதல் ஏற்படும். திடீரென எதிர்பாராத திருப்பத்தால் இருவரும் அண்ணன் தங்கை என்பது தெரிய வருகிறது. இதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் மனோரமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சிறப்புகள் இருக்கிறது. பைரவிட்டில் தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஸ்ரீகாந்த் முதன்முறையாக வில்லனாகவும், வில்லனாக நடித்து வந்த ரஜினி ஹீரோவாகவும் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
