நெகட்டிவ் முடிவால் ரசிகர்கள் அதிருப்தி… அதன் பின்னர் கிளைமேக்ஸ் மாற்றப்பட்ட தமிழ் படங்கள்!

By vinoth on கார்த்திகை 18, 2024

Spread the love

இந்திய சினிமாவிற்கு வயது 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மௌனப் பட காலத்தில் இருந்து இந்தியாவில் சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன. அதே போல தமிழ் சினிமாவுக்கும் வயது நூறைத் தொடப் போகிறது. உலகளவில் அதிக சினிமா தயாரிக்கும் ஒரு நாடாக இந்தியா உள்ளது.

தமிழ் சினிமா இந்த நூறாண்டு காலத்தில் பல மாற்றங்களை வித்தியாசமானக் கதைக்களங்களையும் கண்டுள்ளது. பல விதவிதமான கிளைமேக்ஸ்களை பார்த்துள்ளது. எத்தனையோ காவியத்துயர் மிக்க சோகக்கதைகளை ரசிகர்கள் பார்த்து ஏற்றுக் கொண்டுள்ளனர்.

   

#image_title

   

ஆனால் சில படங்களின் சோகக் கிளைமேக்ஸை மட்டும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அந்த படங்களின் வணிக வெற்றி பாதிக்கும் என்பதால் அதை மாற்றி ரிலீஸ் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. அப்படி கிளைமேக்ஸ் மாற்றப்பட்ட படங்களைப் பற்றி பார்க்கலாம்.

 

அஜித்தின் முகவரி, அஜித்தின் கிரீடம், கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, அரவிந்த் சுவாமி, பிரபுதேவா நடித்த ‘மின்சாரக் கனவு’ மற்றும் பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ மற்றும் விஜய் நடித்த ப்ரியமுடன் ஆகிய திரைப்படங்களை முக்கியமாக சொல்லலாம்.

இந்த படங்கள் எல்லாமே சில பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கும். அதில் ஒன்று கதாநாயகன் அடைய நினைத்த இலக்கை எட்ட முடியாத சூழல் க்ளைமேக்ஸாக இருக்கும். முகவரி, கிரீடம் போன்ற அஜித்தின் படங்கள் இந்தவகையில் வரும். மற்றொரு வகை படத்தின் கதாநாயகியோ அல்லது கதாநாயகனோ இறந்துவிடுவது போல க்ளைமேக்ஸ் உருவாக்கப்பட்டிருக்கும். அது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாக இருக்கும். அதனால் அதை இயக்குனர்கள் சில மாற்றங்கள் செய்து மாற்றியுள்ளனர்.

#image_title

ஆனால் இப்படி மாற்றம் செய்தும் அந்தபடங்கள் சூப்பர் ஹிட் ஆனதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் அதற்கு மாற்றாக சரியாக வைக்கப்பட்ட நெகட்டிவ் க்ளைமேக்ஸ் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.