தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து வந்த நடிகர் தான் ஸ்ரீகாந்த். ஆரம்ப காலத்தில் பார்த்திபன் கனவு, ரோஜாக்கூட்டம் மற்றும் பம்பரக் கண்ணாலே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தால். ஆனால் அதன் பிறகு இவர் பல ஆண்டுகளாக வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றார். இப்படியான நிலையில் தன்னுடைய இந்த நிலைமைக்கு என்னுடைய மேனேஜர் சித்தப்பா தான் காரணம் என்று ஸ்ரீகாந்த் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சித்தப்பா என்று ஸ்ரீகாந்த் வலைப்பேச்சு அந்தணன் அவர்களைத்தான் குறிப்பிடுகிறார் என சமூக வலைத்தளங்களில் செய்தி உலா வந்தது.

இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ஸ்ரீகாந்த் குறித்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ஸ்ரீகாந்த் உடன் நான் பல படங்களில் ஒன்றாக இணைந்து பயணித்திருக்கிறேன். ஸ்ரீகாந்தின் பார்த்திபன் கனவு திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு மனதெல்லாம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தனது நண்பருடன் சேர்ந்து காரில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். அந்த சமயத்தில் ஸ்ரீகாந்த் இடம் ஒரு மேனேஜர் இருந்தார்.
)
அவர்தான் சித்தப்பா. அவர் ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் மணிரத்தினம் சாரிடம் படத்திற்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு ஸ்ரீகாந்த் அதில் நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டார். அந்த சமயத்தில் ஏற்கனவே கமிட்டான திரைப்படங்களிலும் ஸ்ரீகாந்தால் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு மேனேஜர் பதவியில் இருந்து அவரை தூக்கி விட்டான் நிலையில் அதன் பிறகு தான் மேனேஜராக நான் ஸ்ரீகாந்திடம் சேர்ந்தேன். இதை உணராமல் அந்த சித்தப்பா நான் தான் என்று எல்லோரும் கிளப்பி விட்டுட்டாங்க. உண்மையிலேயே அந்த சித்தப்பா நான் இல்ல.

அதன் பிறகு ஸ்ரீகாந்த் உடன் சேர்ந்து ஒரு விளம்பரத்தில் பயணித்த போது மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட என்னுடைய வீட்டை கூட நான் விற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். ஆனால் அதற்கு ஸ்ரீகாந்த் காரணம் கிடையாது. அவர் தன்னால் முடிந்த பங்களிப்பை அந்த இடத்தில் கொடுத்தார். இதையெல்லாம் அறியாமல் தேவையில்லாமல் இணையவாசிகள் தான் இது போன்ற வதந்தியை கிளப்பி விட்டுட்டு இருக்காங்க என்று வலைப்பேச்சு அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
